முகப்பு /செய்தி /இந்தியா / ராமநவமி வன்முறை சம்பவம் தொடர்பாக 77 பேர் கைது.. பீகாரில் உஷார் நிலை

ராமநவமி வன்முறை சம்பவம் தொடர்பாக 77 பேர் கைது.. பீகாரில் உஷார் நிலை

பீகாரில் வன்முறை

பீகாரில் வன்முறை

ராம நவமி வன்முறை சம்பவம் தொடர்பாக 77 பேரை இதுவரை பீகார் மாநில காவல்துறை கைது செய்துள்ளது.

  • Last Updated :
  • Bihar, India

கடந்த வாரம் ராம நவமி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த ராம நவமி கொண்டாட்டங்களின் போது நாட்டின் சில மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இந்த வன்முறை சம்பவம் அதிகம் காணப்பட்டன.

குறிப்பாக, பீகார் மாநிலத்தின் நலாந்தா, சஸாரம் போன்ற பகுதிகளில் கோரமான மோதல்கள் நடைபெற்ற நிலையில், ஒருவர் கொலை செய்யப்பட்டார். 6 பேர் படுகாயமடைந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீசார் தொடர் ரோந்து பணிகளிலும், கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பீகாரின் சஸாரம் பகுதியில் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில், வன்முறை சம்பவங்களால் தடை சட்டம் போடப்பட்டதால் வருகை ரத்து செய்யப்பட்டது.

இதையும் படிங்க: கிரிக்கெட் போட்டியில் 'நோ பால்' கொடுத்ததில் தகராறு.. இளைஞர் படுகொலை.. பகீர் சம்பவம்

இந்த வன்முறை சம்பவத்திற்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையில் காவல்துறை உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. வன்முறை சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ராமநவமி வன்முறை சம்பவம் தொடர்பாக 77 பேரை இதுவரை மாநில காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் பலரை பிடித்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

First published:

Tags: Bihar, Nitish Kumar, Violence