நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டம் குறித்து மக்களவையில் உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய ஜல்சக்தித்துறை இணையமைச்சர் பிரஹலாத் சிங் பட்டேல் எழுத்துப்பூர்வமாக பதில் தெரிவித்துள்ளார்.
இதுவரை ஊரகப் பகுதிகளில் சுமார் 11.49 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் வழங்கப்பட்டதாக அமைச்சரின் பதிலில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜல்ஜீவன் இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியது. அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தூய்மையான குடிநீர் வழங்கும் நோக்கத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. 2019 ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் மொத்தம் 3 கோடியே 23 லட்சம் வீடுகளில் மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு இருந்தது.
மாநில அரசுகளுடன் இணைந்து ஜல்ஜீவன் இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டதையடுத்து கடந்த மூன்றரை ஆண்டுகளில் கூடுதலாக 8 கோடியே 26 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் உள்ள 19.43 கோடி கிராமப்புற வீடுகளில் இதுவரை 11.49 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராமர் இந்துக்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமான கடவுள்.. அல்லாவால் அனுப்பி வைக்கப்பட்டவர் - பரூக் அப்துல்லா பேச்சு
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2019 ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் உள்ள 1 கோடியே 25 லட்சம் கிராமப்புற வீடுகளில் 21 லட்சத்து 76 ஆயிரம் வீடுகளில் மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு இருந்தது. தற்போது 56 லட்சத்து 83 ஆயிரம் கிராமப்புற வீடுகளில் குழநீர் குழாய் இணைப்பு உள்ளது. கோவா, குஜராத், ஹரியானா, பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார், புதுச்சேரி, தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ யூனியன் பிரதேசங்களில் 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரின் பதிலில் இவ்வாறு பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Drinking water, Parliament Session, Pipe