உத்தர பிரதேச மாநிலத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. முகமது இர்பான் என்ற இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர் சமஸ்கிருத பாடத்தில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சந்தவுளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சலாலுதீன். இவர் தினக்கூலியாக வேலை பாரத்து வருகிறார். இவருக்கு தினசரி வருமானம் ரூ.300 தான் என்ற நிலையில், அருகே உள்ள சம்பூர்ணாநந்த் சமஸ்கிருத அரசு பள்ளியில் தனது மகன் முகமது இர்பானை சேர்த்துள்ளார். இந்த பள்ளியில் சமஸ்கிருதம், இலக்கியம் கட்டாய பாடங்களாகும். இந்நிலையில், 17 வயதான இர்பான் சமீபத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளார். இதன் முடிவுகள் தற்போது வெளியான நிலையில், மாநில அளவில் சமஸ்கிருதத்தில் முதலிடம் பிடித்து முகமது இர்பான் அசத்தியுள்ளார்.
சமஸ்கிருத பாடத்தில் 82.71 சதவீத மதிப்பெண் எடுத்து சுமார் 13,000க்கும் மேற்பட்ட மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ளார் இர்பான். சமஸ்கிருதத்தில் முதல் 20 இடங்கள் எடுத்த மாணவர்களில் ஒரே இஸ்லாமிய மாணவரும் இவர் தான். முகமது இர்பானுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், தந்தை சலாலுதீனும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். பள்ளியில் சேர்ந்த ஆரம்பத்திலேயே தனது மகனுக்கு சமஸ்கிருதம் படிக்க பிடித்துவிட்டது. இந்து, முஸ்லிம் என மதம் பார்க்காமல் நாங்கள் தேவையான ஆதரவு தந்தோம்.
இதையும் படிங்க: ஆணுக்கு பெண் குரல்.. கேலி கிண்டல்களை கண்டுகொள்ளாமல் பாடலில் ஜொலிக்கும் நம்பிக்கை நபர்!
அரசு பள்ளியில் படித்த அவனுக்கு ஆசிரியர்களும் தேவையான உதவிகளை செய்து தந்தனர். அவன் பட்டப்படிப்பு, மேல் படிப்பு ஆகியவற்றை சமஸ்கிருத பாடத்தில் படிக்க விரும்புகிறான். முதுகலை படித்து முடிக்கும் பட்சத்தில் அவன் சமஸ்கிருத ஆசிரியர் ஆவான் என்கிறார் உற்சாகமாக.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sanskrit, Uttar pradesh