முகப்பு /செய்தி /இந்தியா / அடிக்கடி ஆபாச படங்கள்... இணையத்தில் தேடிய காதலன்... காதலியை துண்டு துண்டாக வெட்டிய வழக்கில் பகீர்!

அடிக்கடி ஆபாச படங்கள்... இணையத்தில் தேடிய காதலன்... காதலியை துண்டு துண்டாக வெட்டிய வழக்கில் பகீர்!

சரஸ்வதி - மனோஜ்

சரஸ்வதி - மனோஜ்

Mira Road Murder | இளம்பெண் கொலை வழக்கில் கைதான மனோஜ் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Mumbai, India

மகாராஷ்டிராவின் மிரா பகுதியில் உள்ள பகுதியில் பெண் ஒருவர் தனது லிவ் இன் பார்ட்னரால் பல துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஷ்ரத்தா வாக்கர் படுகொலை பாணியிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மும்பை அருகே உள்ள மிரா ரோடு பகுதியில் உள்ள வீட்டில் மனோஜ் சானே என்ற 56 வயது நபரும் சரஸ்வதி வைத்தியா என்ற 32 வயது பெண்ணும் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், மனோஜ் தனது பார்ட்னர் சரஸ்வதியை கொடூரமாக கொலை செய்ததுடன், உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். மேலும் சில உடல் பாகங்களை குக்கரில் வேக வைத்து நாய்க்கு உணவாக போட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் கைதான மனோஜ் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் பல அதிர்ச்சி உண்மைகள் வெளியாகியுள்ளன.

தனக்கு எச்ஐவி நோய் இருப்பதாக கூறிய மனோஜ், இதன் காரணமாக தங்களுக்குள் பாலியல் உறவு ஏதும் வைத்துக்கொள்ளவில்லை என்றுள்ளார். தனக்கு இந்த நோய், விபத்து ஒன்றில் ரத்தம் மாற்றும் போது பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து பரவி விட்டது என போலீசாரிடம் மனோஜ் வாக்குமூலம் தந்துள்ளார். தனக்கு எச்ஐவி நோய் பரவியது குறித்து மனோஜ் கூறும் வாக்குமூலங்களை போலீசார் சந்தேக கண்ணுடன் பார்த்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை திசை திருப்ப அவர் ஏதேனும் கட்டுக்கதைகளை வாக்குமூலங்களில் திணிக்கிறாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்ந்து அவரது மொபைல் போனின் Search History-ஐ தேடிய போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். கொலை செய்த தினத்தன்று சடலத்தை எப்படி டிஸ்போஸ் செய்வது என தேடியுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து ஷ்ரத்தா கொலை வழக்கை பார்த்த மனோஜ் அதே பாணியில் உடலை கூறு போட்டுள்ளார். அதையடுத்து துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக நெட்டில் தேடி சடலத்தை குக்கரில் வேகவைத்துள்ளார். மேலும் சடலத்தின் மீது நீலகிரி தைலத்தையும் ஊற்றியுள்ளார். ஆனால் அவரது மொத்த ப்ளானும் சொதப்பலில் முடிந்ததால் போலீசில் சிக்கி கொண்டார்.

மேலும், அவர் அடிக்கடி ஆபாச தளங்களை பார்ப்பதாக கூறப்படுகிறது. ஆபாச தளங்களின் பெயரை நினைவில் வைத்து கொள்ள முடியாததால் அவர், 7 முதல் 8 ஆபாச வலைதளங்களின் பெயர்களை ஒரு காகிதத்தில் எழுதி வைத்துள்ளார். அதனை கண்ட சரஸ்வதி என்னை தவிர எந்த பெண்ணின் உடலையுன் நீ பார்க்க கூடாது என சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதனாலும் இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

First published:

Tags: Crime News, Mumbai, Murder