முகப்பு /செய்தி /இந்தியா / ராணுவ வீரர்கள் 5 பேர் கொலை... காஷ்மீரில் ஆய்வுமேற்கொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

ராணுவ வீரர்கள் 5 பேர் கொலை... காஷ்மீரில் ஆய்வுமேற்கொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

அமைச்சர் ராஜ்நாத் சிங்

அமைச்சர் ராஜ்நாத் சிங்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

  • Last Updated :
  • Jammu and Kashmir, India

ராணுவ வீரர்கள் 5 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டார்.

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள கண்டி வனப்பகுதியில், பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், ராணுவ வீரர்கள் 5 பேர் வீர மரணம் அடைந்தனர். ஜம்மு - காஷ்மீரில் அடுத்தடுத்து நடைபெறும் தாக்குதல்களால் ராணுவ வீரர்கள் உயிரிழந்து வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அம்மாநிலத்திற்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.

ரஜோரி ராணுவ முகாமிற்கு சென்ற ராஜ்நாத் சிங், ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ராணுவ தளபதி மனோஜ் பாண்டே உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

Also Read : தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு... மத்திய பிரதேச முதலமைச்சர் அறிவிப்பு

ரஜோரியில் சிறப்பு புலனாய்வு பிரிவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ள நிலையில், தீவிரவாதி ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவரிடம் இருந்து AK 56 ரக துப்பாக்கி, 3 கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

top videos
    First published:

    Tags: Jammu and Kashmir, Rajnath Singh