பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரன் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதான ராஜேஷ் மாஞ்சி. தலித் சமூகத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளரான இவர் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கிழிசேரி பகுதியில் கோழிப் பண்ணையில் இவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை இவர் கடைபகுதிகள் உள்ள தெருவில் மர்மான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணையை தொடங்கினர். அவர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்திருப்பார் என அப்பகுதியினர் கூறியுள்ளனர். பின்னர், உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளியான நிலையில் ராஜேஷை மோசமான தாக்குதலுக்கு உள்ளாக்கி அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பின்னர், காவல்துறை செல்போன் மற்றும் சிசிடிவி ஆதாரங்களை வைத்து நடத்திய விசாரணையில் அதிர்ச்சி உண்மை வெளிவந்துள்ளது.
சம்பவ நாள் அன்று அப்பகுதியில் கடை வைத்திருக்கும் 9 பேர் கொண்ட கும்பல் ராஜேஷை அடித்து கொலை செய்துள்ளனர். அவர்கள் கடையில் திருடு சென்றதாகவும், அதை ராஜேஷ் தான் செய்ததாகவும் கூறி அவரை நள்ளிரவு 2 மணிநேரம் பிடித்து வைத்து கழி, கம்புகளை கொண்டு கொடூரமாக அடித்து தாக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் மரணம்... விஷவாயு தாக்கியதால் நேர்ந்த சோகம்
இந்த கோர தாக்குதலில் குற்றுயிரும் குலை உயிருமாக இருந்த ராஜஷை அதிகாலை 2 மணி அளவில் சாலையில் தூக்கி வீசினர். இவர்களின் கொடூர தாக்குதல் காரணமாக ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அப்சல், பாசில், ஷப்ருதீன், மெஹ்பூப், அப்துஸ்சமத், நாசர், ஹபீப், ஆயூப், சைனுல் அபித் என்ற 9 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு பீகார் மாநில சமூக நலத்துறை அமைச்சர் மதன் சாஹ்னி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொலை செயலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்குவதை கேரளா அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Kerala, Migrant Workers, Murder