முகப்பு /செய்தி /இந்தியா / பெண் தர மறுப்பு... திருமணங்களுக்கு தடையாக இருக்கும் சாலை... புலம்பித் தள்ளும் இளைஞர்கள்...!

பெண் தர மறுப்பு... திருமணங்களுக்கு தடையாக இருக்கும் சாலை... புலம்பித் தள்ளும் இளைஞர்கள்...!

ஊர் மக்கள் புகார் அளிக்கும் போது

ஊர் மக்கள் புகார் அளிக்கும் போது

வடக்கு 24 பர்கனா மாவட்ட பகுதி இருக்கும் கிராமத்தில் வசிக்கும் ஆண்களுக்குக் கல்யாணம் நடக்காமல் இருப்பதற்கு அந்த கிராம சாலைகள் தான் காரணம் என்று அப்பகுதி எம்.எல்.ஏ-விடம் புகார் அளித்துள்ளனர்.

  • Last Updated :
  • West Bengal, India

மேற்கு வங்காளத்தில் அமைந்திருக்கும் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் இருக்கும் துல்னி என்னும் கிராமத்தில் சாலைகள் சரியாக இல்லாததால் அந்த கிராம ஆண்களுக்குத் திருமணம் ஆவது இல்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அப்பகுதி எம்.எல்.ஏ கிராமத்தை பார்வையிட வந்தபோது ஊர் மக்கள் கூடி சாலை அமைக்கக் கோரி முற்றுகையிட்டுள்ளார்.

துல்னி கிராமத்தின் சாலைகள் மிக மோசமான நிலையில் இருப்பதால் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்களைத் திருமணம் செய்ய வேறு ஊர் பெண் முன்வரவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர். அந்த பகுதியின் பல இடங்களை இணைக்கும் சாலைகள் பராமரிக்கப்படாமல் நெடுநாளாக உள்ளது. சாலை சரியில்லாததால் வண்டிகள் அந்த வழியில் செல்ல முடியவில்லை. மேலும் நடப்பது கூட கடினமாகிவிட்டதாக மக்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்பது அப்பகுதி மக்களின் புகாராக இருக்கிறது.

இந்த நிலையில், அடுத்த உள்ளாட்சித் தேர்தலுக்குள் சாலை அமைக்கப்படவில்லை என்றால் கண்டிப்பாக போராட்டம் நடத்தப்படும் என்று ஊர் மக்கள் கூறியுள்ளனர். அந்த கிராமத்தை சேர்ந்த சேகர் பாலா என்பவர் கூறுகையில்,  இந்த சாலை பிரச்னை நெடுநாளாக இருந்து வருவதாகவும், இதனால் வேறு ஊர் குடும்பங்கள் இங்கே உள்ள ஆண்களுக்கு திருமணத்திற்கு பெண் தருவது இல்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார்.

Also Read : உக்ரைனில் மருத்துவம் படித்தவர்களுக்கு இந்தியாவில் வாய்ப்பு... மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்..!

இதனைத்தொடர்ந்து, பாக்தா எம்எல்ஏ பிஸ்வஜித் தாஸ் அப்பகுதி கிராமங்களை பார்வையிடச் சென்றார். அப்போது ஊர் மக்கள் கூடி அவரிடம் சாலை பற்றிய புகார் அளித்தனர். அதற்கு 2 கி.மீ தூரம் வரை சாலை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில நாட்களில் பணி நடைபெறும் என்று உறுதியளித்துள்ளார். சாலை சரிசெய்யப்பட்டால், கிராம ஆண்களுக்குத் திருமணமாகும் என்று ஊர் மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Marriage, Men