முகப்பு /செய்தி /இந்தியா / கை கொடுக்காத விவசாயம்..! தேனீ வளர்ப்பில் சாதித்து காட்டிய விவசாயி..!

கை கொடுக்காத விவசாயம்..! தேனீ வளர்ப்பில் சாதித்து காட்டிய விவசாயி..!

பகீரத் பகத்

பகீரத் பகத்

நம் நாட்டில் குறைந்த முதலீட்டு திறன் கொண்ட தொழில்களில் தேனீ வளர்ப்பு என்பதும் முக்கியமான ஒரு தொழிலாக இருக்கிறது. மேலும் இது நேரடி வேலைவாய்ப்பை வழங்கும் திறன் கொண்டதாகவும் இருக்கிறது.

  • Last Updated :
  • Maharashtra, India

தற்போதெல்லாம் விவசாயத்துடன் விவசாயம் சார்ந்த துணைத் தொழிலையும் செய்யும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூடுதல் விவசாயத் தொழிலில் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது என்பதால் பல விவசாயிகள் தங்களது வருவாயை பெருக்க விவசாயம் சார்ந்த துணை தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நம் நாட்டில் குறைந்த முதலீட்டு திறன் கொண்ட தொழில்களில் தேனீ வளர்ப்பு என்பதும் முக்கியமான ஒரு தொழிலாக இருக்கிறது. மேலும் இது நேரடி வேலைவாய்ப்பை வழங்கும் திறன் கொண்டதாகவும் இருக்கிறது.

தேனீ வளர்ப்பு என்பது வனவியல், சமூக வனவியல் மற்றும் விவசாய ஆதரவு நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பை உள்ளடக்கியது, ஏனெனில் இது ஊட்டச்சத்து, பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை வழங்குகிறது.தவிர வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. தேனீ வளர்ப்பு என்பது இந்தியாவில் புதிதல்ல. இதில் அதிக நபர்கள் ஈடுபட்டு வருவதால் தேன் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பல விவசாயிகள் விவசாயத்தைத் தவிர்த்து, துணை தொழிலாக தேனீ வளர்ப்பை தேர்வு செய்கிறார்கள்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் இருக்கும் Igatpuri தாலுகாவில் உள்ள பாலைடூரி கிராமத்தைச் சேர்ந்த பகீரத் பகத் (Bhagirath Bhagat) என்பவர் விவசாயத்தோடு சேர்த்து தேனீ வளர்ப்பு தொழிலை தொடங்கி வெற்றியும் பெற்றுள்ளார். பகீரத் பல ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வந்தாலும், அவர் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. எனவே அதிகரித்து வரும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு விவசாயத்தோடு வேறு தொழிலும் ஈடுபட வேண்டும் என நினைத்தார். பின் பல தொழில்களை பற்றிய விவரங்களை அறிந்து கொண்டார். இறுதியாக தேனீ வளர்ப்பு பற்றிய தகவல்கள் வருமானத்திற்கு சிறந்த ஆதாரமாக இருக்கும் என்று தோன்றியதால் இந்த தொழிலையே தேர்வு செய்தார். குறைந்த முதலீட்டில் தேனீ வளர்ப்பு தொழில் செய்யலாம் என்பதும் இவருக்கு நல்லதாக போய்விட்டது.

Read More : பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து... 12 இளைஞர்கள் பலி... மகாராஷ்டிராவில் சோகம்!

தேனீ வளர்ப்பு தொழிலை செய்வது என்று முடிவெடுத்த பிறகு அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள பயிற்சிக்காக மகாபலேஷ்வர் சென்றார். பகீரத் பகத் வசிக்கும் பகுதியில் தேனீ வளர்ப்பு பற்றி யாருக்கும் தெரியாது. எனவே இவர் தான் அங்கு தேனீ வளர்ப்பில் ஈடுபாடும் முதல் நபரானார். தேனீ வளர்ப்பில் இவரது முதல் படியால் இவரது கிராமத்தில் பல விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி, இவர் தனது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை சக விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டு லாபமும் ஈட்டுகிறார்.

தனது கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பற்றி விரிவாக கற்று தருகிறார் அதுவும் இலவசமாக.. இதுவரை தனது கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பற்றி கற்று தந்துள்ளார். தான் வசிக்கும் இகத்புரி தாலுகாவில் வறண்ட நில விவசாயிகள் அதிகம். அதாவது பல விவசாயிகள் பருவமழை காலத்தில் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலையில் உள்ளனர். இந்த சிக்கல் காரணமாக, பல விவசாயிகள் வேலைக்காக வேறு பகுதிகள் அல்லது நகரங்களுக்கு இடம் பெயர்ந்து விடுகிறார்கள்.

இந்த நிலையை மாற்றவே விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு குறித்து இலவசமாக பயிற்சி அளித்து அவர்களை சொந்த காலில் நிற்க வைக்க முயற்சிக்கிறேன். நான் பயிற்சியளித்த விவசாயிகளில் சிலர் மெதுவாக இந்த தொழிலைத் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் என்றார்.

First published:

Tags: Agriculture, Maharashtra, Trending