முகப்பு /செய்தி /இந்தியா / இந்திய மூவர்ண கொடியை அகற்றிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்... பிரிட்டன் தூதருக்கு இந்தியா சம்மன்!

இந்திய மூவர்ண கொடியை அகற்றிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்... பிரிட்டன் தூதருக்கு இந்தியா சம்மன்!

இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அத்துமீறல்

இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அத்துமீறல்

இந்திய தூதரகத்திற்குள் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நுழைந்து தூதரக கட்டடத்தில் ஏற்றப்பட்டிருந்த மூவர்ண தேசிய கொடியை அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்குள் நுழைந்து காலிஸ்தான் பிரிவினை இயக்க ஆதரவாளர்கள் அத்துமீறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கக் கோரி இந்தியாவுக்கான பிரிட்டன் தூதருக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கொண்டு சில சீக்கிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. சமீப காலமாக இந்த காலிஸ்தான் இயக்கத்தில் தீவிர முகமாக செயல்பட்டு வரும் நபர் அம்ரித்பால் சிங். கடந்த மாதம் இவரது ஆதரவாளர்கள் சிலர் பஞ்சாப் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அப்போது அம்ரித்பால் அந்த காவல் நிலையத்திற்குள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்து சூறையாடி தனது ஆதரவாளர்களை வெளியே கொண்டுவந்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து அம்ரித்பாலை கைது சய்யும் நடவடிக்கையில் பஞ்சாப் காவல்துறை மார்ச் 18ஆம் தேதி களமிறங்கியது. ஆனால், தகவல் அறிந்து அம்ரித்பால் தப்பியோடி இரண்டு நாள்களாக தலைமறைவாக உள்ளார். அம்ரித்பாலின் 'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பை சேர்ந்த 117 பேரை பஞ்சாப் போலீஸ் கைது செய்துள்ளது.

காலிஸ்தான் இயக்கம், அம்ரித்பாலுக்கு ஆதரவான பலர் வெளிநாடுகளில் உள்ள நிலையில், அம்ரித்பால் மீதான நடவடிக்கைக்கு எதிராக காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அத்தோடு நிற்காமல் தூதரகத்திற்குள் நுழைந்து தூதரக கட்டடத்தில் ஏற்றப்பட்டிருந்த மூவர்ண தேசிய கொடியை அகற்றி காலிஸ்தான் கொடியை ஏற்றினர்.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிரிட்டன் அரசு உரிய விளக்கம் தர வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவுக்கான பிரிட்டன் தூதருக்கு வெளியுறவுத்துறை நேரில் ஆஜராகி விளக்கம் தர சம்மன் அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க: 6 மாதம் பழக்கம்... ஆன்லைன் நண்பரை நேரில் பார்க்க சென்ற 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

"பிரிட்டன் அரசு இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்காமல் இருந்ததை ஏற்கவே முடியாது. இந்த அத்துமீறிலில் ஈடுபட்ட பிரிவினைவாத, தீவிரவாத குழுவை சேர்ந்த நபர்களை கைது செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என இந்திய வெளியுறவுத்துறை அறிக்கையில் கூறியுள்ளது.

First published:

Tags: Punjab, UK