முகப்பு /செய்தி /இந்தியா / தப்பியோடிய காலிஸ்தான் தலைவர்.. முடக்கப்பட்ட இணைய சேவைகள்... பஞ்சாப்பில் உச்சக்கட்ட பரபரப்பு..!

தப்பியோடிய காலிஸ்தான் தலைவர்.. முடக்கப்பட்ட இணைய சேவைகள்... பஞ்சாப்பில் உச்சக்கட்ட பரபரப்பு..!

ஆதரவாளர்களுடன் அம்ரித் பால் சிங்

ஆதரவாளர்களுடன் அம்ரித் பால் சிங்

தலைமறைவாக உள்ள வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்த பஞ்சாப் காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Punjab, India

பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கொண்டு சில சீக்கிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. சமீப காலமாக இந்த காலிஸ்தான் முழக்கத்துடன் தீவிரமாக செயல்பட்டு வரும் நபர் தான் அம்ரித்பால் சிங்.

பஞ்சாப் மாநிலம் ஜல்லுபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த அமிர்த்பால், தூபாயில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தவர். அங்கு இவருக்கு பாகிஸ்தான் உளவுத் துறையான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், பஞ்சாப்பிற்கு திரும்பி 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற இயக்கத்தை தொடங்கி காலிஸ்தான் ஆதரவு கருத்துக்களை பரப்பி வருகிறார். கடந்த மாதம் இவரது ஆதரவாளர்கள் சிலர் பஞ்சாப் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அப்போது அம்ரித்பால் அந்த காவல் நிலையத்திற்குள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்து சூறையாடி தனது ஆதரவாளர்களை வெளியே கொண்டுவந்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், சமீபத்தில் பேசிய அம்ரித்பால் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மிரட்டல் விடும் தொனியில் கருத்து கூறியிருந்தார். தங்கள் கொள்கை விவகாரங்களில் மத்திய அமைச்சர் அமித் ஷா தலையீடு இருந்தால், இந்திரா காந்திக்கு நேர்ந்த கதி தான் அவருக்கும் ஏற்படும் என அமிரித்பால் பேசியிருந்தார். இந்த கருத்தும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அம்ரித்பால் விவகாரம் பூதாகரமாக மாறத் தொடங்கிய நிலையில், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் கடந்த வாரம் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார். இதைத் தொடர்ந்து நேற்று நண்பகல் பஞ்சாப் காவல்துறை அதிரடியாக பெரும் தேடுதல் வேட்டையை தொடங்கியது. சுமார் 7 மாவட்ட காவல்துறையினர் இனைத்து சிறப்பு தனிப்படை அமைத்து அமிர்பாலை கைது செய்ய ஜலந்தர் விரைந்தனர். ஆனால் அதற்குள்ளாக தகவல் அறிந்த அமிர்பால் தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.

நேற்று நண்பகல் மாநிலம் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டது. இன்று மதியம் 12 மணி வரை இணைய சேவை செயல்படாது என காவல்துறை அறிவித்துள்ளது. அமிர்பாலின் முக்கிய கூட்டாளியான தலிஜீத் சிங் ஹரியானாவில் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவருக்கு தொடர்புடைய 78 பேர் இதுவரை கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... சபரிமலையில் அமைகிறது விமான நிலையம்.. வந்தது சூப்பர் அப்டேட்..!

தலைமறைவாக உள்ள அம்ரித்பாலை பிடிக்க தொடர் தேடுதல் வேட்டையை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. அம்ரித்பாலின் சொந்த கிராமத்தை காவல்துறை மற்றும் துணை ராணுவ படையினர் சீல் செய்து உஷார் நிலையில் உள்ளனர். சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட மாநிலம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கூர்ந்து கவனித்து வருகிறது.

First published:

Tags: Internet, Punjab