பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாபெரும் தூய்மை பணி இயக்கத்தை கோயில் தேவஸ்தானம் நேற்று நடத்தியது. சுமார் 1,000 பேர் பங்கேற்ற இந்த இயக்கத்தை முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் வெங்கடரமண ரெட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் EO தர்மா ரெட்டி உள்ளிட்ட முன்னணி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
ஏழுமலைகளை கொண்ட திருப்பதியின் மலை அடிவாரத்தை அலிபிரி என்று அழைக்கின்றனர். திருமலைக்கு நடைபாதை வழியாக ஏறி வரும் பக்தர்கள் அங்கிருந்து தான் நடக்கத் தொடங்குகின்றனர். இந்நிலையில், ஏழு மலைகளிலும் பக்கதர்கள் நடந்து வரும் போது அவர்கள் மூலம் பிளாஸ்டிக் பொருள்கள் போன்ற குப்பைகள் குவிந்து மலையை அசுத்தமாக்குகின்றன.
இந்நிலையில், விழிப்புணர்வு இயக்கமாக இந்த தூய்மை பணியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா தொடங்கி அனைத்து முன்னணி பிரமுகர்களும் குப்பகளை எடுத்து அகற்றி சுத்தம் செய்தனர்.
இதையும் படிங்க: திருப்பதி கோயிலுக்குள் அத்துமீறி வீடியோ எடுத்த நபர் கைது..! - வெளியான பரபரப்பு தகவல்கள்!
திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த 700 ஊழியர்கள், மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த 200 ஊழியர்கள் உள்ளிட்ட சுமார் 1000 பேர் பலக்குழுக்களாக பிரிந்து இந்த தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த தூய்மை பணியின் போது 1600 பிளாஸ்டிக் பை குப்பைகள் எடுத்து சுத்தம் செய்யப்பட்டதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த தூய்மை பணியானது மாலை வரை நடைபெற்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cleanliness, Tirumala, Tirumala Tirupati