திருப்பதி மலையில் இம் மாதம் 13ஆம் தேதி மாபெரும் அளவிலான தூய்மை பணி நடக்க உள்ளது. இதில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி ரமணா உட்பட 2000 பேர் பங்கேற்க உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் மாதத்தில் ஒரு நாள் மாஸ் கிளீனிங் ப்ரோக்ராம் என்ற பெயரில் பிரமுகர்கள், பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் பங்கேற்கும் தூய்மை பணியை தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலையில் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
இம்மாத முதல் 13 ம் தேதி முதல் ஒவ்வொரு மாதமும் மாதம் ஒரு நாள் மாஸ் கிளீனிங் ப்ரோக்ராம் திருப்பதி மலையில் நடைபெறும். இந்த திட்டத்தின் முதல் நாள் ஆன 13 ம் தேதியான நாளை திருப்பதி மலையில் உள்ள இரண்டு சாலைகள், திருப்பதி மலைக்கு செல்ல பக்தர்கள் பயன்படுத்தும் இரண்டு நடைபாதைகள் ஆகியவற்றை முழுவதுமாக சுத்தம் செய்து அந்த பகுதிகளில் பக்தர்கள் விட்டு சென்றிருக்கும் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் செய்துள்ளது.
இந்த தூய்மை பணியில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரமணா, தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, மாவட்ட ஆட்சியர், எஸ்பி, தேவஸ்தான ஊழியர்கள், தன்னார்வலர்கள், பக்தர்கள் ஆகியோர் உட்பட 2000 பேர் பங்கேற்க உள்ளனர்.
தூய்மை பணியில் ஈடுபட இருக்கும் நபர்களை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சேர்ப்பது, பணி முடிந்த பின் மீண்டும் அவர்களை அழைத்து செல்வது, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவற்றை விநியோகிப்பது, சேகரிக்கப்பட்ட குப்பைகளை உடனுக்குடன் அங்கிருந்து அப்புறப்படுத்துவது ஆகியவற்றுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் நிர்வாகம் விரிவான வகையில் செய்து வருகிறது.
மேலும் படிக்க... திருப்பதி திருமலை பக்தர்களுக்கு நற்செய்தி.. கூட்டமில்லாத மிக எளிதான தரிசனம்.!
இந்த நிலையில் இது பற்றி பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cleanliness, Tirumala Tirupati, Tirupathi