முகப்பு /செய்தி /இந்தியா / மேற்கு வங்கத்திற்கு பெருமை சேர்க்கும் பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி…

மேற்கு வங்கத்திற்கு பெருமை சேர்க்கும் பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி…

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

மேற்கு வங்கம் குறித்து பிரதமர் மோடியின் மன் கி பாத் பதிவுகள், அந்த மாநிலத்தின் மீது பிரதமருக்கு ஆழமான புரிதல் இருப்பதை காட்டுகின்றன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மேற்கு வங்கத்தின் புகழை நாடு முழுவதும் கொண்டு சென்று சேர்ப்பதில் பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சிக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மேற்கு வங்க மாநிலத்திற்கு பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளார். மனதின் குரல் என்று பொருள்படும் மன் கி பாத் என்ற ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி வார ஞாயிற்று கிழமைகளில் இந்த நிகழ்ச்சி ரேடியோக்களில் ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஏப்ரல் 30 ஆம் தேதி அடுத்த வாரம் ஞாயிற்று கிழமையன்று மனதின் குரல் நிகழ்ச்சி 100 ஆவது பதிப்பை நிறைவு செய்கிறது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாநிலங்களின் சிறப்பையும் அங்குள்ள மக்களின் தனித்தன்மைகள், வாழ்வியலை பதிவு செய்திருக்கிறார்.

அந்த வகையில் மேற்கு வங்க மாநிலம் குறித்து மன் கி பாத்தின் பல நிகழ்ச்சிகளில் முக்கிய பல தகவல்களை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். மேற்கு வங்கத்தின் கலாசாரம், வரலாறு, மக்களின் வாழ்வியல் குறித்த தகவல்களை நாட்டு மக்களை பகிர்ந்ததில் பிரதமரின் பங்கு அளப்பரியதாக உள்ளது. நாட்டின் சுதந்திரத்திற்காக மேற்கு வங்கத்தை சேர்ந்த முக்கிய தலைவர்கள் போராடியுள்ளனர். அவர்களது வரலாற்றை மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். ஒரு சமயம் பிரதமர் மோடி கொல்கத்தாவிற்கு சென்றபோது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் குடும்பத்தினரை சந்தித்த நிகழ்வுகளை மன் கி பாத் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

top videos

    மேற்கு வங்கம் குறித்து பிரதமர் மோடியின் மன் கி பாத் பதிவுகள், அந்த மாநிலத்தின் மீது பிரதமருக்கு ஆழமான புரிதல் இருப்பதை காட்டுகின்றன. தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய மேற்கு வங்க ஹீரோக்களை நிகழ்ச்சியில் விவரிக்கும்போது, மாநிலத்திற்கு பெருமை சேர்த்தவர்களையும் பதிவு செய்ய மோடி தவறுவதில்லை.  நாட்டின் வளர்ச்சியில் மேற்கு வங்கத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பது பிரதமர் மோடியின் நம்பிக்கையாக உள்ளது. அதன் அடிப்படையில் மேற்கு வங்கம் குறித்த வீரமும், தியாகமும் கொண்ட பதிவுகளை தொடர்ந்து மன் கி பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு வருகிறார் பிரதமர் மோடி.

    First published:

    Tags: Mann ki baat, PM Modi