முகப்பு /செய்தி /இந்தியா / மணிப்பூரில் மீண்டும் மோதல்.. போலீஸ் கமாண்டோ ஒருவர் பலி..!

மணிப்பூரில் மீண்டும் மோதல்.. போலீஸ் கமாண்டோ ஒருவர் பலி..!

மணிப்பூரில் நடக்கும் தாக்குதல்

மணிப்பூரில் நடக்கும் தாக்குதல்

Manipur | மணிப்பூர் மாநிலத்தில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது குறிப்பிடத்தக்கது.

  • Last Updated :
  • Manipura, India

மணிப்பூர் மாநிலத்தின் சுராசந்த்பூரில் குகி இனத்தவர் நடத்திய தாக்குதலில் போலீஸ் கமாண்டோ ஒருவர் கொல்லப்பட்டார். 5 பேர் காயமடைந்துள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் அண்மையில் மாற்று சமூகத்தினருக்கு பழங்குடியினர் என்று சான்றளிக்க பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினர். இந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டது. வீடுகள்,கடைகள்,வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டு, ராணுவமும் களமிறக்கப்பட்டது.

இந்த நிலையில் காவல்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது குகி சமூகத்தைச் சேர்ந்த போராளிக் குழுவினர் ஒரு கமாண்டோவை சுட்டனர். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சிலர் காயமடைந்தனர். அங்கு துணை ராணுவப்படையினர் சென்று காயமடைந்த கமாண்டோக்களை மீட்டனர்.

மேலும் படிக்க... தீவிர புயலாக வலுவடைந்தது மோக்கா..

இதனிடையே தாங்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தங்கள் வீட்டு கதவுகளில் மக்கள் பெயர்களை ஓட்டி வருகின்றனர். தாக்குதல்களை தவிர்க்கவே இத்தகைய உத்தியை பயன்படுத்துவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். அமைதி திரும்பிய மணிப்பூரில் தற்போது மீண்டும் மோதல் போக்கு அதிகரித்துள்ளதால் அங்கு நிலைமை சிக்கலாகியிருக்கிறது.

top videos
    First published:

    Tags: Manipur