முகப்பு /செய்தி /இந்தியா / தனது தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களுக்கு சரத் பவாரின் பெயரை சூட்டிய விவசாயி.! - என்ன காரணம்?

தனது தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களுக்கு சரத் பவாரின் பெயரை சூட்டிய விவசாயி.! - என்ன காரணம்?

தோட்டத்தில் விளைந்த மாம்பழங்கள்

தோட்டத்தில் விளைந்த மாம்பழங்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும் பல முக்கிய விஷயங்களில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் NCP கட்சி தலைவருமான சரத் பவாரின் பெயர் அடிபடுவது புதிய விஷயம் அல்ல. ஆனால் அரசியல் காரணங்களுக்காக அல்லாமல் சரத் பவாரின் பெயர் இப்போது வித்தியாசமான விஷயத்திற்காக பேசப்பட்டு வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Maharashtra, India

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும் பல முக்கிய விஷயங்களில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் NCP கட்சி தலைவருமான சரத் பவாரின் பெயர் அடிபடுவது புதிய விஷயம் அல்ல. ஆனால் அரசியல் காரணங்களுக்காக அல்லாமல் சரத் பவாரின் பெயர் இப்போது வித்தியாசமான விஷயத்திற்காக பேசப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவின் சோலாப்பூரை சேர்ந்த விவசாயி ஒருவர் மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவரான சரத் பவாரின் பெயரை பயன்படுத்தி இருக்கிறார். எதற்காக, என்ன விஷயம் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

சோலாப்பூரை சேர்ந்த விவசாயியான தட்டாட்டேரியா கட்ஜ் ( Dattatreya Gadge) என்ற விவசாயி, தனது தோட்டத்தில் விளையும் மாம்பழங்களுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவர் சரத் பவாரின் பெயரை சூட்டியுள்ளார். இவரது தோட்டத்தில் விளையும் மாம்பழங்கள் ஒவ்வொன்றும் சராசரியாக சுமார் 2.5 கிலோ எடை கொண்டதாக இருக்கின்றன. சோலாபூரில் ஏற்பாடு செய்யப்பட்ட மாம்பழத் திருவிழாவில் இவரது தோட்டத்து மாம்பழங்கள் மிகவும் பிரபலமடைந்தன.

இதற்கு காரணம் விவசாயி தட்டாட்டேரியா கட்ஜ்  தனது தோட்டத்தில் விளையும் மாம்பழங்களுக்கு ‘Sharad Mangoes’ என பெயரிட்டு உள்ளார். உங்கள் தோட்டத்து மாம்பழங்களுக்கு ஏன் சரத் பவாரின் பெயரிட்டீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த இந்த விவசாயி, சரத் பவார் மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்தபோது பால்பாக் திட்டத்தை (Phalbag Scheme) தொடங்கினார். இந்த திட்டத்தின் கீழ் எனது 8 ஏக்கர் நிலத்தில் சுமார் 7000 கேசர் மாம்பழ செடிகளை நடவு செய்தேன்.

Read More : பகலில் நோட்டம்.. இரவில் கொள்ளை.. நள்ளிரவில் புதுச்சேரியை பதறவைக்கும் முகமூடி கும்பல்!

NCP தலைவரின் முயற்சியை கவுரவிக்கும் வகையில்,எனது தோட்டத்தில் விளையும் 2.5 கிலோ எடையுள்ள மாம்பழங்களுக்கு சரத் பவாரின் பெயரை சூட்டி இருக்கிறேன் என விவசாயி தட்டாட்டேரியா கட்ஜ் விளக்கம் அளித்து உள்ளார்.என் தோட்டத்தில் விளையும் மாம்பழங்கள் அதன் எடை மற்றும் அதன் பெயரால் மாம்பழத் திருவிழாவில் மக்களை வெகுவாக ஈர்த்திருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். தங்கள் பண்ணையில் கேசர் மாம்பழத்தை உற்பத்தி செய்யும் மா மரத்தில் பல ஹோமியோபதி மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்ற ஆச்சர்ய தகவலையும் கூறி இருக்கிறார்,

Baramati Agriculture Science Centre மற்றும் Baramati Agriculture Development Trust-ன் ராஜேந்திர பவார் மேற்கொண்ட விரிவான ஆராய்ச்சியின் அடிப்படையில், பல ஹோமியோபதி மருந்துகளை மரங்களில் பயன்படுத்தி, நல்ல எடை கொண்ட மாம்பழங்களை வெற்றிகரமாக உற்பத்தி செய்ய முடிந்தது என்றார். இந்த ஆராய்ச்சி மற்றும் பரிசோதனையின் காரணமாக 2.5 கிலோ மாம்பழங்கள் அமோகமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

top videos

    மேலும் Baramati Agricultural College விஞ்ஞானிகள் மாம்பழ திருவிழாவுக்கு வந்த பிறகு சரத் பவார் பெயரை வைக்க ஒப்பு கொண்டதாகவும் விவசாயி குறிப்பிட்டு உள்ளார். இதனை தொடர்ந்து மாம்பழ திருவிழாவில் பங்கேற்க வந்த Baramati Agriculture College வேளாண் விஞ்ஞானிகள் இதற்கு ‘Sharad Mango’ எனப் பெயரிட்டுள்ளதாக விவசாயி தட்டாட்டேரியா கட்ஜ் தெரிவித்தார்.

    First published:

    Tags: Maharashtra, Trending