முகப்பு /செய்தி /இந்தியா / திருப்பதி கோயிலுக்குள் அத்துமீறி வீடியோ எடுத்த நபர் கைது..! - வெளியான பரபரப்பு தகவல்கள்!

திருப்பதி கோயிலுக்குள் அத்துமீறி வீடியோ எடுத்த நபர் கைது..! - வெளியான பரபரப்பு தகவல்கள்!

திருமலை திருப்பதி கோயில்

திருமலை திருப்பதி கோயில்

திருப்பதி கோயிலுக்கு அத்துமீறி வீடியோ எடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Andhra Pradesh, India

இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் ஒன்று. நாட்டிலேயே இங்குதான் அதிகளவிலான பக்தர்கள் குவிந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இந்த கோயிலில் பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக பக்தர்களுக்கு பல விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் தேவஸ்தான ஊழியர்கள் உட்பட அனைவரின் உடைமைகளும் மலையடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பக்தர்கள் கோவிலுக்கு செல்லும்போது செல்போன்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை எடுத்து செல்கிறார்களா என்று இரண்டு முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

செல்போன்களை ரிமோட் போன்று பயன்படுத்தி நாச வேலைகளில் ஈடுபட வாய்ப்புகள் உள்ள காரணத்தால் அவற்றுக்கு கோயிலுக்குள் அனுமதி கிடையாது. மேலும் சாஸ்திர ரீதியாக மூலவர் ஏழுமலையானை வீடியோ, படம் எடுக்க கூடாது என்ற காரணத்திற்க்காவும் ஏழுமலையான் கோவிலுக்குள் செல்போன்களை எடுத்து செல்ல பக்தர்கள் உட்பட யாருக்கும் அனுமதி இல்லை.

இத்தனை கட்டு காவல்களையும் மீறி கடந்த மே 7ஆம் தேதி ஏழுமலையான் கோவிலுக்குள் ஒரு பக்தர் செல்போனை எடுத்து சென்று அங்கு தனது இஷ்டத்திற்கு வீடியோ பதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழுமலையான் கோவிலை பொறுத்தவரை வெள்ளி வாசலை தாண்டி கேமராக்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்தர் வெள்ளிவாசலை தாண்டி உள்ளே சென்று தங்க கோபுரமான ஆனந்த நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடியோ பதிவு செய்திருக்கிறார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பெரும் அதிர்ச்சி அடைந்தது.

தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை திருப்தி நிர்வாகம் ஆய்வு செய்ததில், இந்த செயிலில் ஈடுபட்டவர் ராகுல் ரெட்டி என்ற நபர் என்றும், இவர் தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இவரை திருப்பதி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அன்றைய தினம் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்ட தேவஸ்தான அலுவலர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் 36,000 ஆசிரியர்களின் பதவி பறிபோனது.. கொல்கத்தா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

top videos

    சம்பவ நாள் அன்று திருமலையில் மின்வெட்டு ஏற்பட்டதாகவும், அந்த சமயத்தை பயன்படுத்தி அந்த நபர் ரகசியமாக பேனா கேமராவை எடுத்துவந்துள்ளார் என முதல்கட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மத்திய மாநில உளவுத்துறைகள் வரும் வாரம் கோயிலுக்கு வந்து ஆய்வு செய்வார்கள் எனவும் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Crime News, Tirumala, Tirumala Tirupati