வித்தியாசமான அனுபவங்களுடன் சாதனை நிகழ்த்தி காட்ட வேண்டும் என்ற ஆர்வமும், வேகமும் ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும். யாரும் செய்ய துணியாத காரியங்களை தங்கள் மன விருப்பத்தை பூர்த்தி செய்யும் பொருட்டு இவர்கள் மேற்கொள்வார்கள். அத்தகைய நபர்களில் ஒருவராக இருக்கிறார் அமெரிக்க வாழ் இந்தியரான லக்வீந்தர் சிங். 53 வயதாகும் இவருக்கு சாலை வழி பயணத்தில் அலாதியான பிரியம் உண்டு.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கார் மூலமாகவே பயணிப்பது என்று முடிவு செய்தார் அவர். 53 நாட்கள் மேற்கொண்ட பயணத்தில் 22,000 கிலோ மீட்டர்களை எட்டி 23 நாடுகளை கடந்து வந்திருக்கிறார்.
சொந்த பணத்தில் பயணம்
இந்தப் பயணத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிட்ட போதிலும், தன் பயணத்தை லக்வீந்தர் சிங் கைவிடவில்லை. இந்தப் பயணத்திற்காக யாரிடமும் அவர் ஸ்பான்சர்ஷிப் பெறவும் இல்லை. சுமார் ரூ.1 கோடி அளவுக்கு தன் சொந்தப் பணத்தை செலவு செய்தே இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டார்.
அமெரிக்காவும், இந்தியாவும் கடல் கடந்து நிற்கும் தேசங்கள் ஆகும். ஆகவே, நேரடியாக காரிலேயே பயணத்தை கடப்பது சாத்தியமற்றது. அந்த வகையில் அமெரிக்க எல்லையில் இருந்து கப்பல் மூலமாக தனது காரை லண்டனுக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு காரிலேயே பயணித்தார். தனது பயணத்தின் போது பல்வேறு ஐரோப்பிய நாடுகளை அவர் கடந்திருக்கிறார்.
மேலும் படிக்க... டிராவல் செய்ய திட்டமிடும் முன் ஸ்மார்டாக பேக்கிங் செய்து பழகுவது அவசியம் : எப்படி தெரியுமா..?
வெவ்வேறு நாடுகளில் அபராதம்
ஒவ்வொரு நாடுகளிலும் போக்குவரத்து விதிகள் வெவ்வேறாக உள்ளன. இதனால் பல சந்தர்பங்களில் லக்வீந்தர் சிங் அபராதம் செலுத்த நேரிட்டது. அளவில்லா வேகத்தில் பயணம் செய்ய அனுமதிக்கும் ஜெர்மனியின் ஆடோபான் சாலையில் அவர் பயணித்தார். ஆனால், செர்பியா, துருக்கி போன்ற நாடுகளில் பயணம் செய்த போது அதிவேகத்தில் வந்ததற்காக அபராதம் செலுத்த நேரிட்டது. பாகிஸ்தானும் கூட லக்வீந்தர் சிங்கிடம் அபராதம் வசூலிக்க தவறவில்லை.
ஊக்கம் தந்த லாக்டவுன்
தொலைதூர பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற சிந்தனை எந்தவொரு நபருக்கும் சாதாரணமாக ஏற்பட்டுவிடாது. ஏதேனும் ஒரு நிகழ்வு அதற்கு உந்து சக்தியாக இருக்கும். கொரோனா பொது முடக்கம் காரணமாக போக்குவரத்து இன்றி முடங்கியிருந்தபோது இந்தியாவுக்கு வர முடியாமல் லக்வீந்தர் சிங் 2 மாதங்களாக தவித்துக் கொண்டிருந்தார். அந்த நிகழ்வுதான் கார் மூலமாக பயணம் மேற்கொள்ளும் யோசனையை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.
அமெரிக்காவில் இருந்து இந்தியா வருகின்ற பயணத்தில் லக்வீந்தர் சிங்குடன் அவரது மகனும் பயணித்துள்ளார். வழி நெடுக வெவ்வேறு நாடுகளின் வழியாக பயணம் மேற்கொண்டது இவர்களுக்கு மறக்க இயலாத பெரும் அனுபவங்களை கொடுத்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: America, Car travel, India