முகப்பு /செய்தி /இந்தியா / மது அருந்திய இளம்பெண் சுட்டுக்கொலை... பஞ்சாப்பில் அதிர்ச்சி சம்பவம்..!

மது அருந்திய இளம்பெண் சுட்டுக்கொலை... பஞ்சாப்பில் அதிர்ச்சி சம்பவம்..!

பெண் சுட்டுக்கொலை

பெண் சுட்டுக்கொலை

பர்மிந்தர் கவுரை அவர் துப்பாக்கியால் தொடர்ந்து ஐந்து முறை சுட்டுள்ளார். அதில் மூன்று குண்டுகள் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

  • Last Updated :
  • Punjab, India

பஞ்சாப் மாநிலம் துக்னிவரன் சாஹிப் குருத்வாராவுக்கு வெளியே மது அருந்தியதற்காக 33 வயது பெண் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பஞ்சாபின் பாட்டியாலாவில் உள்ள துக்னிவரன் சாஹிப் குருத்வாரா வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெண் ஒருவர் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதனைக்கண்ட ஒருவர், துப்பாக்கியால் அந்த பெண்ணைச் சுட்டுக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அந்த நபரைக் கைது செய்தனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்து புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் மதுபான பாட்டில்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

விசாரணையில், இறந்த பெண் பர்மிந்தர் கவுர் என்பதும், அவர் ஏற்கனவே மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது. அந்த குருத்வாரா வளாகத்தில் உள்ள சரோவர் அருகே மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது. அவரின் இந்த செயல் சீக்கியர்களின் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டதாகக் கூறி நிர்மல்ஜித் சிங் சைனி என்ற நபர் தனது துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொலை செய்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read : இவரை எப்படி ஐபிஎல் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கலாம்..? ஸ்டார் ஸ்போர்ட்ஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..

பர்மிந்தர் கவுரை அவர் துப்பாக்கியால் தொடர்ந்து ஐந்து முறை சுட்டுள்ளார். அதில் மூன்று குண்டுகள் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இறந்த பெண் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரிடம் இருந்த பொருட்களை வைத்து குடிபோதைக்கு அடிமையாகி அவர் சிகிச்சை பெற்று வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, நிர்மல்ஜித் சிங் சைனியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் விசாரணைக்குச் சிறையில் அடைத்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Crime News, Punjab, Woman