முகப்பு /செய்தி /இந்தியா / ஆண்டுக்கு ரூ.70 லட்சம் சம்பளம்.. பணக்கார வரனாக பில்டப் கொடுத்து பெண்ணை லட்சக்கணக்கில் ஏமாற்றிய நபர்

ஆண்டுக்கு ரூ.70 லட்சம் சம்பளம்.. பணக்கார வரனாக பில்டப் கொடுத்து பெண்ணை லட்சக்கணக்கில் ஏமாற்றிய நபர்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஆன்லைன் வரன் தேடும் இணையதளத்தில் தன்னை பணக்கார வரனாக காட்டி பெண் ஒருவரிடம் இருந்து ரூ.3.05 லட்சம் பணம் பறித்த நபரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

டெல்லி கேசவபுரம் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். அதன்படி, அந்த பெண் குருகிராமில் உள்ள எம்என்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரும், அவரது பெற்றோரும் தனக்கு வரன் தேட ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளனர். அதில் பதிவு செய்த ப்ரோபைல்களில் தேடி வந்துள்ளனர்.

அதில் ஒருவர், தான் ஒரு எஃச்ஆர் ஊழியர் எனவும், ஆண்டுக்கு ரூ.50-70 லட்சம் வரை வருமானம் வருவதாகவும் கூறியுள்ளார். அதை பார்த்ததும் பிடித்துப் போய் அவரது ப்ரோபைலுக்கு பெண் வீட்டார் ரெக்வஸ்ட் கொடுத்து பேசத் தொடங்கியுள்ளனர். கடந்த மாதம் இவரும் சாட் செய்யத் தொடங்கிய நிலையில், தன்னிடம் விலை உயர்ந்த கார் இருக்கிறது, சொகுசு பங்களாக்கள் இருக்கிறது என போட்டோக்களையும், வீடியோக்களையும் அனுப்பி அந்த பெண்ணை கவர்ந்துள்ளார்.

இதன்மூலம் பெண் மற்றும் அவரது குடும்பத்தாரின் நம்பிக்கையை பெற்றுள்ளார். அப்படியே உங்களுக்கு மலிவு விலையில் நான் ஐபோன் மேக்ஸ் ப்ரோ வாங்கித் தருகிறேன் எனக் கூறி தனது சதி வலைக்குள் சிக்க வைத்துள்ளார். அவரின் பேச்சை நம்பி ரூ.3.05 லட்சம் பணத்தை அந்த நபருக்கு பெண் வீட்டார் அனுப்பியுள்ளனர். பணம் கிடைத்த கையுடன் அந்த நபர் பெண்ணை சமூக வலைத்தளங்களில் பிளாக் செய்துவிட்டார்.

மேலும், தனக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது என்னை தொடர்பு கொள்ளாதீர்கள் என அவர் பெண் வீட்டாரிடம் கூறியுள்ளார். பதறிப்போய் சந்தேகமடைந்த பெண் வீட்டார் போலீசாரிடம் புகார் அளிக்கவே அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் மோசடி நபர் சிக்கியுள்ளார். அவர் உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரை சேர்ந்த விஷால் எனவும், எம்பிஏ பட்டதாரியான இவர் 2021 வரை எச்ஆர் ஆக பணியாற்றியுள்ளார்.

இதையும் படிங்க: இளைஞரின் ஆணுறுப்பை கடித்து குதறிய நாய்... ஊர் மக்கள் கூடி எடுத்த அந்த முடிவு...!

top videos

    பின்னர் வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்கினார். அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்ட நிலையில், இதுபோன்ற திருமண வரன் இணையதளத்தில் தனது போலி ப்ரோபைலை பதிவேற்றம் செய்து மோசடியில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். இவரிடம் வேறு பலர் ஏமர்ந்துள்ளார்களா என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்து வருகிறது. மேலும், இவரது வங்கிக்கணக்கையும் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Cheating, Crime News, Fraud, Matrimony, Online Frauds