முகப்பு /செய்தி /இந்தியா / நடுரோட்டில் இப்படியா...? இளம்பெண்களுடன் பைக்கில் ஜாலியாய் வீலிங் செய்த இளைஞன்... தீவிரமாய் தேடும் போலீஸ்..!

நடுரோட்டில் இப்படியா...? இளம்பெண்களுடன் பைக்கில் ஜாலியாய் வீலிங் செய்த இளைஞன்... தீவிரமாய் தேடும் போலீஸ்..!

வைராலன பைக் சாகச வீடியோ

வைராலன பைக் சாகச வீடியோ

மும்பையில் இளைஞர் ஒருவர் இரு பெண்களை பைக்கில் வைத்துக்கொண்டு அபாயமான சாகசம் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

  • Last Updated :
  • Maharashtra, India

ரீல்ஸ் வீடியோ மோகத்திற்கு ஆசை பட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஆபத்தான சாகசங்களை பொதுவெளியில் செய்யும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றது. அப்படித்தான் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் ஒரு இளைஞர் இரு பெண்களை பைக்கில் வைத்து செய்த சாகசம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆபத்தான சாகச வீடியோ மும்பை போலீஸ் கவனத்திற்கு வந்துள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒரு இளைஞர் தனது பைக்கில் முன் பகுதியில் ஒரு பெண்ணையும் பின் பகுதியில் ஒரு பெண்ணையும் வைத்து நடுவே இவர் அமர்ந்து வேகமாக வண்டி ஓட்டுகிறார்.

மூன்று பேருமே ஹெல்மெட் அணியாத நிலையில், முன்பகுதியில் உள்ள பெண்ணின் வண்டி ஓட்டும் இளைஞரை பார்க்கும் விதமாக திரும்பி அமர்ந்துள்ளார். அந்த இளைஞரோ தனது பைக்கில் வேகமாக ட்ரிப்பிள்ஸ் போனது மட்டுமல்லாது, முன்பக்கத்து சக்கரத்தை உயரத் தூக்கி அபாயமான முறையில் வீலிங் செய்கிறார். பொது சாலையில் வைத்துக்கொண்டு இந்த இளைஞர் செய்த இந்த சாகச வீடியோ ட்விட்டரில் வைரலாக பரவியது.

ட்விட்டரில்  இந்த வீடியோவை பகிர்ந்த ஒருவர், மும்பை டிராபிக் போலீசாரை டேக் செய்தது. இதைத் தொடர்ந்து மும்பை போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்போவதாக உறுதி அளித்தனர். வண்டியை ஓட்டிய நபர் மட்டுமல்லாது அதில் சென்ற இரு பெண்கள் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்ததாக  காவல்துறை தகவல் தெரிவிக்கிறது.

top videos
    First published:

    Tags: Bike, Crime News, Mumbai, Viral Video