முகப்பு /செய்தி /இந்தியா / தினமும் மது, கஞ்சா போதையில் தகராறு.. போதை ஆசாமியை குடும்பத்தாரே கொலை செய்து எரித்த பகீர் சம்பவம்

தினமும் மது, கஞ்சா போதையில் தகராறு.. போதை ஆசாமியை குடும்பத்தாரே கொலை செய்து எரித்த பகீர் சம்பவம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தர்மராஜ்ஜை கொலை செய்த குடும்பத்தார் அதை மறைக்க வயலிலேயே அவரது உடலை தீவைத்து எரித்துள்ளனர்.

  • Last Updated :
  • Maharashtra, India

போதைக்கு அடிமையான நபரை அவரது குடும்பத்தினரே அடித்து கொலை செய்து தீவைத்து எரித்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னாவில் உள்ள அம்பத் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். 35 வயதான இவருக்கு திருமணமாகி நிர்குன் என்ற மகன் உள்ளார்.

தீவிர மது, கஞ்சா போதைக்கு அடிமையான தர்மராஜ், தனது தந்தை நாராயண் சகோதரர் கரண்ராஜ் ஆகியோருடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக தர்மராஜ் தினம்தோறும் போதையுடன் வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். வீட்டார் கண்டித்து பார்த்தும் அவர் தனது செயலை மாற்றிக்கொள்வதாக இல்லை.

இது அவரது வீட்டாருக்கு பெரும் தொந்தரவாக மாறி எரிச்சலடையவைத்துள்ளது. சம்பவ நாளான கடந்த மே 15ஆம் தேதி அன்று தர்மராஜ் வழக்கம் போல கடுமையான போதையில் இருந்துள்ளார். அப்போது தர்மராஜ்ஜின் தந்தை, சகோதரர், மகன் ஆகியோர் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அவர்களிடம் தர்மராஜ் போதையில் தகராறு செய்துள்ளார்.

அப்போது வாக்குவாதம் முற்றி அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. தர்மராஜ் மீதான ஆத்திரத்தில் அம்மூவரும் அவரை கையில் இருந்த கழி கம்புகளை வைத்து கடுமையாக அடித்து தாக்கியுள்ளனர். கடுமையான தாக்குதலுக்கு ஆளான தர்மராஜ் சம்ப இடத்திலேயே உயிரிழந்தார். பதறிப்போன மூவரும் விஷயத்தை மூடி மறைக்க திட்டமிட்டு வயலிலேயே வைத்து தர்மராஜின் உடலை எரித்துள்ளனர்.

இதையும் படிங்க: திருமணத்தன்று விஷம் அருந்திய காதல் ஜோடி.. மணமகன் மரணம் - பகீர் தகவல்

top videos

    ஆனால், அடுத்த நாள்களிலேயே உண்மை கசியவே காவல்துறை அங்கு வந்து தர்மராஜ்ஜின் தந்தை, சகோதரர் மற்றும் மகன் ஆகிய மூவரையும் கைது செய்தது. அவர்கள் மீது இபிகோ 301, 201, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தது. மேலும், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    First published:

    Tags: Crime News, Drug addiction, Maharashtra, Murder case