முகப்பு /செய்தி /இந்தியா / தலைக்கேறிய போதை.. தனது திருமணத்திற்கே வராமல் தூங்கிய மாப்பிள்ளை... மணமகள் எடுத்த அதிரடி முடிவு..!

தலைக்கேறிய போதை.. தனது திருமணத்திற்கே வராமல் தூங்கிய மாப்பிள்ளை... மணமகள் எடுத்த அதிரடி முடிவு..!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுபோதையில் ஒரு நபர் தனது திருமணத்திற்கே வராமல் தூங்கிய பரபரப்பு சம்பவம் பீகார் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Bihar, India

பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள சுல்தான்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த நபருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த  13ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், பெண் வீட்டார் திருமணத்திற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து வைத்து மாப்பிள்ளையின் வருகைக்காக காத்திருந்தனர்.

ஆனால், நேரம் தான் சென்றதே தவிர மாப்பிள்ளை வரவே இல்லை. இதனால் மணபெண் வீட்டார் கவலை அடைந்தனர். என்னவென்று விசாரித்த போதுதான் அதிர்ச்சியான தகவல் தெரியவந்தது. மாப்பிள்ளை தனது திருமண நாள் அன்று பயங்கரமாக மது குடித்துவிட்டு போதையில் சுயநினைவை இழந்து தூங்கியுள்ளார்.

அடுத்த நாள் போதை தெளிந்து மணப்பெண் வீட்டரை பார்க்க மாப்பிள்ளை வந்துள்ளார். இத்தகைய குடிகார நபரை தன்னால் திருமணம் செய்துகொண்டு வாழ முடியாது என மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார். அத்துடன் திருமண ஏற்பாட்டிற்கு செய்த செலவு தொகையை திருப்பி தருமாறு பெண் வீட்டார் மாப்பிள்ளை இடம் கேட்டுள்ளனர்.

இதையும் படிங்க: “நான் பிரதமர் அலுவலக அதிகாரி...” Z+ பாதுகாப்பு, குண்டு துளைக்காத காரில் வலம்வந்த மோசடி நபர்..!

இது தொடர்பாக இரு தரப்புக்கும் தகராறு ஏற்படவே, மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரை சிறை பிடித்துள்ளனர். இதற்குள்ளாக தகவல் காவல்துறையின் கவனத்திற்கு செல்வே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பேசி பிரச்சனையை முடித்து வைத்துள்ளனர். போதையில் மாப்பிள்ளை தனது திருமணத்திற்கே வராமல் விட்ட  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

First published:

Tags: Alcohol, Alcohol consumption, Bihar, Marriage