முகப்பு /செய்தி /இந்தியா / குடிபோதையில் தகராறு.. நண்பரின் ஆணுறுப்பை வெட்டி வீசிய நபர்.. பீச்சில் நடந்த பகீர் சம்பவம்!

குடிபோதையில் தகராறு.. நண்பரின் ஆணுறுப்பை வெட்டி வீசிய நபர்.. பீச்சில் நடந்த பகீர் சம்பவம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

குடிபோதையில் நடந்த சண்டையில் நண்பரின் ஆணுறுப்பை வெட்டி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • Last Updated :
  • Odisha (Orissa), India

ஒடிசா மாநிலம் கேந்தரபாரா மாவட்டத்தில் உள்ள பென்தா என்ற பகுதியில் வசிப்பவர் 30 வயதான பகவத் தாஸ். இவர் நேற்று இரவு வீட்டில் இருந்த நிலையில், அவரது நண்பரான 32 வயதான அக்சய் ராவத் என்பவர் அங்கு வந்துள்ளார்.

அருகே உள்ள கடற்கரைக்கு சென்று வரலாம் என அழைத்த நிலையில், அவர்கள் இருவரும் அங்கு சென்று மது அருந்தியுள்ளனர். அப்போகு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக மாறவே இந்த சண்டையில் பகவத் தாஸ்சின் ஆணுறுப்பை அவரது நண்பர் அக்சய் கூரிய ஆயுதத்தால் அறுத்து எறிந்துள்ளார்.

இந்த பகீர் காரியத்தை செய்தவுடன் சய்சய் ஆட்டோ ஒன்றை பிடித்து தப்பி ஓடியுள்ளார். இதற்குள் பகவத் வீட்டாருக்கு இந்த தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் பீச்சிற்கு விரைந்து பகவத்தை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உடல்நிலை தொடர்ந்து மோசமடையவே கட்டக் நகரில் உள்ள எஸ்சிபி மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: கிரிக்கெட் போட்டியில் 'நோ பால்' கொடுத்ததில் தகராறு.. இளைஞர் படுகொலை.. பகீர் சம்பவம்

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், இபிகோ 307 கொலை முயற்சி பிரிவின் கீழ் சஞ்சய் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறது. அவர் தப்பி சென்ற ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து விசாரித்துள்ளது.

top videos
    First published:

    Tags: Crime News, Odisha