வடகிழக்கு மாநிலமான அசாமின் டாரங் மாவட்டத்தில் சிபஜ்ஹரைச் சேர்ந்தவர் முகமது சைதுல் ஹாக். ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த இவர், கடந்த ஆறு ஆண்டுகளாக 1, 2, 3. 10 ரூபாய் நாணயங்களை சேமித்து வந்தார். இந்த நாணயங்கள், 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு வந்த நிலையில், முகமது சைதுல் ஹாக் இவற்றை மூட்டையாக கட்டி, நேற்று குவகாத்தியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமிற்கு எடுத்து சென்றார்.
இதை பார்த்து ஆச்சரி யமடைந்த ஷோரூம் உரிமையாளர், முகமதுவை பாராட்டியதுடன், அவர் எடுத்து வந்த நாணயங்களை பெற்று, புதிய ஸ்கூட்டருக்கான சாவியை வழங்கினார். இது குறித்து முகமது கூறுகையில், "ஸ்கூட்டர் வாங்கும் கனவுடன் கடந்த ஆறு ஆண்டுகளாக நாணயங்களை சேமித்து வந்தேன். அந்த கனவு நேற்று நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.
#WATCH | Assam: Md Saidul Hoque, a resident of the Sipajhar area in Darrang district purchased a scooter with a sack full of coins he saved. pic.twitter.com/ePU69SHYZO
— ANI (@ANI) March 22, 2023
இதற்கிடையே, தான் சேமித்த நாணயங்களை மூட்டையாக கட்டி வந்து ஒருவர் ஸ்கூட்டர் வாங்கியது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Assam, Scooters, Viral News, Viral Video