முகப்பு /செய்தி /இந்தியா / விமானம் தரையிறங்கும் நேரத்தில் எமர்ஜென்சி கதவை திறந்த நபர்... மரண பீதியில் 194 பயணிகள்.. பகீர் சம்பவம்

விமானம் தரையிறங்கும் நேரத்தில் எமர்ஜென்சி கதவை திறந்த நபர்... மரண பீதியில் 194 பயணிகள்.. பகீர் சம்பவம்

194 பயணிகளை ஏற்றி சென்ற விமானத்தின் எமர்ஜென்சி கதவை சக பயணி ஒருவர் திறந்துவிட்டார்.

  • Last Updated :
  • inter, IndiaSeoulSeoul

பறக்கும் விமானம் ஒன்று தரையிறங்கும் நேரத்தில் அதன் அவரச கால கதவை திறந்துவிட்டு சக பயணிகளின் உயிருக்கு ஆபத்தை உருவாக்கிய நபரை தென்கொரியா காவல்துறை கைது செய்துள்ளது. தென்கொரியாவில் இயங்கி வரும் பிரபலமான விமானப் போக்குவரத்து சேவை நிறுவனம் ஏசியான ஏர்லைன்ஸ்.

இந்த நிறுவனத்தின் A321-200 என்ற ஏர்பஸ் விமானம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜேஜு என்ற தீவில் இருந்து புறப்பட்டு டேகு சர்வதேச விமான நிலையத்தை நோக்கி சென்றது. இந்த விமானத்தில் 194 பயணிகள் இருந்துள்ளனர். விமானம் டேகு சர்வதேச விமான நிலையத்தை நெருங்கிய நிலையில், தரையிறங்க ஆயத்தமானது. விமானம் தரையிறங்கும் தருவாயில் அதில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க பயணி திடீரென அவரச கால கதவை திறந்துவிட்டார்.

இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் அனைவரும் அலறத் தொடங்கினர். பல பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இருப்பினும் சில நிமிடங்களில் விமானம் திறந்த கதவுகளுடனே பத்திரமாக தரையிறக்கப்பட்டது. நல்வாய்ப்பாக விமானம் விபத்தில் ஏதும் சிக்காமல் தப்பியது. இருப்பினும், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட பயணிகள் சிலர் மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் பரபரப்பு காட்சிகள் இணையத்தில் வைராலகி வருகிறது. கதவை திறந்த 30 வயது வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவரது கை தவறுதலாக பட்டு கதவு திறந்து கொண்டதா அல்லது திட்டமிட்ட சதிச்செயலா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெறுகிறது.

top videos
    First published:

    Tags: Flight travel, South Korea