நாடாளுமன்றத் தேர்தலில் பிராந்தியக் கட்சிகளுக்கு ஆதரவு அளித்தால், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படத் தயார் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில், மேற்குவங்கத்தின் ஹவுராவில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, எங்கெல்லாம் பிராந்தியக் கட்சிகள் வலுவாக உள்ளதோ, அங்கெல்லாம் பாஜக-வால் போட்டியிட முடியாது என்று தெரிவித்தார்.
மேற்குவங்கத்தில் பாஜக-வை திரிணமூல் காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ள வேண்டும் என்றும், டெல்லியில் ஆம்ஆத்மி எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ் இணைந்து செயல்படலாம் என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.
மேலும் படிக்க... 41 தொகுதிகளில் 5000க்கும் குறைவான வாக்குகளில் வென்ற வேட்பாளர்கள்! - கர்நாடக தேர்தலில் சுவாரஸ்யம்!
காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள 200 அல்லது அதற்கு மேலான தொகுதிகளில் போட்டியிடலாம் என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Mamata Banerjee, Parliament elects