முகப்பு /செய்தி /இந்தியா / "மேற்குவங்கத்திற்கு பாரபட்சம் காட்டும் மத்திய அரசு" மம்தா பானர்ஜி தர்ணா!

"மேற்குவங்கத்திற்கு பாரபட்சம் காட்டும் மத்திய அரசு" மம்தா பானர்ஜி தர்ணா!

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

Mamta banerjee protest | பாஜக போன்று அரசு பணத்தை வீணடிக்க மாட்டோம் - மம்தா பானர்ஜி.

  • Last Updated :
  • West Bengal, India

மேற்குவங்கத்திற்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டி அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்திற்கு வழங்கிய வேண்டிய நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். மேலும் மக்கள் விரோத போக்கை பாஜக அரசு கடைபிடிப்பதாக சாடிய அவர், 2 நாள் தர்ணா அறிவித்திருந்தார்.

அதன் படி, கொல்கத்தாவில் உள்ள சிவப்பு சாலையில் அம்பேத்கர் சிலை அருகே கையில் அரசியலமைப்பு சட்டத்துடன் மம்தா பானர்ஜி போராட்டத்தை தொடங்கினார். இதில் பேசிய அவர், கட்சி பணத்தில் இருந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து இருப்பதாக கூறினார். பாஜக போன்று அரசு பணத்தை வீணடிக்க மாட்டோம் என்று மம்தா தெரிவித்தார்.

இதையும் படிங்க : ‘கொரோனா தடுப்பூசி ஃபெயிலியர் ஆனால் அதற்கு நானே பொறுப்பு என்றார் பிரதமர் மோடி’

இதனை தொடர்ந்து பேசிய அபிஷேக் பானர்ஜி, ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்தார். மம்தா பானர்ஜியை சாடும் நோக்கில், அனைத்து பெண்களையும் பிரதமர் மோடி அவதூறாக பேசியதை அபிஷேக் சுட்டிகாட்டினார். அதன் அடிப்படையில் பிரதமர் மோடியையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

top videos
    First published:

    Tags: Mamta, Mamta banerjee