மகாராஷ்டிராவில் இயங்கி வரும் ஜில்லா பரிஷத் பள்ளிகள் அதன் தரமான கல்வி கல்வி பயிர்ப்பு முறை காரணமாக தற்போது அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. கல்வியின் தரத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் வகையில், சத்தாராவில் உள்ள மாவட்ட கவுன்சில் பள்ளிகள் இன்னும் பல விதமான செயல்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
விஜயநகர் மாவட்ட கவுன்சில் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் ஜப்பானிய மொழியில் பேசுவார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், உண்மைதான். இதற்கான முழுப் புகழும் பள்ளியில் மிகவும் விடாமுயற்சியுடன் பணிபுரிந்து வரும் பாலாஜி ஜாத என்ற ஆசிரியரையே சாரும். அவரது வழிகாட்டுதலின் பெயரில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையிலான 40 மாணவர்களுக்கு ஜப்பானிய மொழியை அவர் கற்பித்து வருகிறார்.
விஜயநகர் பள்ளியில் நடைபெறும் செயல்பாடுகள்
விஜயநகர் ஜில்லா பரிஷத் பள்ளியானது நான்காம் வகுப்பு வரை இயங்குகிறது. பாலாஜி ஜாதவ் என்ற ஒரு ஆசிரியர் மட்டுமே அந்த ஒட்டுமொத்த பள்ளியையும் கவனித்து வருகிறார். அங்கு கல்வி பயின்று வரும் மாணவர்கள் தரமான மற்றும் முழுமையான கல்வியை பெற வேண்டும் என்பதே அவரின் ஒரே நோக்கமாகும். ஆகையால் அவருக்குத் தெரிந்த ஜப்பானிய மொழியை மாணவர்களுக்கு கற்பிக்க அவர் முடிவு செய்தார். இதனால் எதிர்காலத்தில் ஜப்பான் போன்ற வெளிநாடுகளுக்கு செல்லவும், அங்குள்ள வாய்ப்புகளை ஆராயவும் இது மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று அவர் எண்ணினார்.
சுயமாக பயின்ற ஜப்பானிய மொழி
ஒரு சில நாட்களுக்கு முன்பில் இருந்துதான் பாலாஜி ஜாதவ் மாணவர்களுக்கு ஜப்பானிய மொழியை கற்பித்து வருகிறார். இதனை கற்பிக்க அவர் மொழி செயலிகள் மற்றும் யூடியூப் போன்றவற்றை கருவிகளாக பயன்படுத்தி வருகிறார். ஜப்பானிய மொழியை அவர் தாமே ஆர்வத்தால் கற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மராத்தி மொழியை போலவே ஜப்பானிய மொழியும் கற்பிக்கப்படுகிறது. முதலில் மாணவர்களுக்கு ஜப்பானிய எழுத்துக்களை எவ்வாறு எழுத வேண்டும் என்பது சொல்லித் தரப்படுகிறது. பின்னர் வார்த்தைகளை உருவாக்கவும், அதிலிருந்து வாக்கியங்களை உருவாக்கவும் கற்பிக்கப்படுகிறது. இந்த முறையைப் பின்பற்றி இப்பொழுது அவர்களது மாணவர்களால் ஜப்பானிய மொழியில் படிக்கவும், எழுதவும், பேசவும் முடியும். தங்களது தாய் மொழியுடன் சேர்த்து ஒரு வெளிநாட்டு மொழியையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் மாணவர்களிடையே அதிகரித்துள்ளது.
ஜப்பானிய மொழியில் கணிதம் மற்றும் சுற்றுச்சூழல்
இந்த பள்ளியின் மாணவர்கள் ஜப்பானிய மொழியை படித்து வருவதோடு, கணித செயல்பாடுகளையும் அந்த மொழியிலேயே செய்தும் வருகின்றனர். விலங்குகள், பறவைகள் மற்றும் மாதங்களின் பெயர்களை ஜப்பானிய மொழியில் கற்று வருகின்றனர். சுற்றுச்சூழலையும் ஜப்பானிய மொழியிலேயே படித்து வருகின்றனர். சிறிய வாக்கியங்களை ஜப்பானிய மொழியில் அமைத்து அவர்களால் எளிமையாக பேச முடியும். யாராவது ஒருவர் ஜப்பானிய மொழியில் பேசினால், அங்குள்ள மாணவர்களால் அதனை புரிந்து கொண்டு அதற்கு பதில் அளிக்க முடியும் என்றும் ஆசிரியர் கூறுகிறார்.
ஜப்பான் தூதரகம் பாராட்டு
இந்தியாவில் உள்ள ஜப்பானிய தூதரகர் பாலாஜி ஜாதவ் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதோடு ஜப்பானிய மொழியை கற்பிக்க கூடுதல் கருவிகளை வழங்கி உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த முன்னேற்றம் கண்டு தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக பாலாஜி ஜாதவ் கூறியுள்ளார். மேலும் அந்தப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய வெளிநாட்டு மொழியை தன் மாணவர்களுக்கு கற்பிக்க உள்ளதாக பாலாஜி தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.