முகப்பு /செய்தி /இந்தியா / நீதிபதி காரை உல்லாச பயணத்துக்கு எடுத்து சென்ற போலீஸ் அதிகாரி... அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை...!

நீதிபதி காரை உல்லாச பயணத்துக்கு எடுத்து சென்ற போலீஸ் அதிகாரி... அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை...!

கோப்புப்படம்

கோப்புப்படம்

காரை பழுதுபார்க்க ஆன செலவு ரூ.2.28 லட்சமும் காவல் அதிகாரியின் பணி ஓய்வு பலன்களில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Mumbai, India

மும்பை உயர்நீதிமன்றம் நாக்பூர் கிளையின் நீதிபதியாக இருப்பவர் வால்மீகி சாமெனசஸ். அரசு பங்களாவில் நிறுத்தப்பட்டு இருந்த இவரது கார், கடந்த ஏப்ரல் 4ம் தேதி சேதம் அடைந்து இருந்தது. கார் எப்படி சேதமானது என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  அப்போது நீதிபதியின் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி அமித் ஜில்பே, காரை உல்லாச சவாரிக்கு எடுத்து சென்று விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.

கார் சேதமடைந்ததற்கு முந்தைய தினம் அமித் ஜில்பே நீதிபதியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அவர் நீதிபதியின் அனுமதி இல்லாமல் அவரது அரசு காரை உல்லாச சவாரிக்கு எடுத்து சென்றார். இரவு 11 மணி அளவில் போலீஸ்காரர் ஓட்டிச்சென்ற நீதிபதியின் கார் வாயுசேனா நகர் பகுதியில் உள்ள சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்தில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. இதையடுத்து அமித் ஜில்பே விபத்து பற்றி யாரிடமும் கூறாமல் மீண்டும் நீதிபதியின் பங்களாவில் காரை மீண்டும் அரசின் பங்களாவிலேயே நிறுத்தியது தெரியவந்தது. இவர் காரை எடுத்து சென்றது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்தநிலையில் அனுமதி இல்லாமல் ஐகோர்ட்டு நீதிபதியின் காரை உல்லாச சவாரிக்கு எடுத்து சென்று விபத்தை ஏற்படுத்திய அமித் ஜில்பே பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். மேலும் காரை பழுதுபார்க்க ஆன செலவு ரூ.2.28 லட்சமும் அமித் ஜில்பேயின் பணி ஓய்வு பலன்களில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என நாக்பூர் காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமார் கூறினார்.

top videos
    First published:

    Tags: Judge, Mumbai, Mumbai Police