முகப்பு /செய்தி /இந்தியா / தொண்டர்கள் புடை சூழ அயோத்தி ராமர் கோயிலில் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஷிண்டே வழிபாடு

தொண்டர்கள் புடை சூழ அயோத்தி ராமர் கோயிலில் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஷிண்டே வழிபாடு

அயோத்தி ராமர் கோயிலில் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே

அயோத்தி ராமர் கோயிலில் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே

அயோத்தி ராமர் கோயில் கட்ட வேண்டும் என பால் தக்ரேவின் கனவை பிரதமர் நரேந்திர மோடி நனவாக்குவதாக மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Uttar Pradesh, India

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. துணை முதலமைச்சராக பாஜகவின் தேவந்திர பட்னாவிஸ் உள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் பட்னாவிஸ் உள்ளிட்டோர் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்திக்கு இன்று சென்றுள்ளனர். அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு சென்று வழிபட்டனர்.

இவர்களுடன் கட்சி எம்பிக்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலரும் உடன் சென்றனர். முன்னதாக முதல்வர் ஷிண்டே காலை தங்கியிருந்த விடுதியில் இருந்து அயோத்திக்கு ஆயிரக்கணக்கான சிவசேனா தொண்டர்கள் புடை சூழ அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்தார். இவர்களுடன் உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் சுவந்திர தேவ் சிங்கும் உடன் இருந்தார்.

தொடர்ந்து அயோத்தி ராமர் கோயிலில் ராம் லல்லாவை வழிபட்டனர். தொடர்ந்து புதிய கோயில் கட்டுமானத்தை சுற்றி பார்த்தனர். மாலையில் ஆரத்தி நிகழ்வுகளில் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தயநாத்தை சந்திக்கும் ஷிண்டே மற்றும் பட்னவிஸ் அவருடன் இரவு உணவில் பங்கேற்கவுள்ளனர்.

ராமர் கோயிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களிடம் பேசிய ஷிண்டே, "அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற கனவு சிவசேனா நிறுவனர் பால் தாக்ரேவுக்கு இருந்தது. அந்த கனவை பிரதமர் நரேந்திர மோடி நனவாக்கி வருகிறார். லட்சக்கணக்கான ராம பக்தர்களின் கனவுகள் நனவாகி வருகிறது" என்றார். லக்னோ விமான நிலையத்தில் இருந்து அயோத்தி செல்லும் வழி நெடுகிலும் சிவசேனா தொண்டர்கள் முதலமைச்சர் ஷிண்டேவுக்கு பிரம்மாண்ட பதாகைகளுடன் வரவேற்பு அளித்தனர்.

First published:

Tags: Ayodhya Ram Temple, Devendra Fadnavis, Maharashtra