இளைஞர்களின் இன்றைய வாழ்க்கை சூழல் ஒரு ஓட்டப்பந்தயம் போல உள்ளது. படித்து முடித்து, நல்ல வருமானம் தரக் கூடிய வேலையில் சேர்ந்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதே பலரது எண்ணமாக இருக்கிறது. அதிலும், Comfort Zone என்று சொல்லக் கூடிய பாதுகாப்பான வட்டத்திற்குள் பணிபுரிவதையே இளைஞர்கள் விரும்புகின்றனர்.வெகு சில இளைஞர்கள் தான் தனக்கான தனிப் பாதையை உருவாக்கிக் கொள்ள முயலுகின்றனர். அதிலும் மெத்த படித்துவிட்டு விவசாயத்தை தேர்வு செய்கின்ற இளைஞர்களின் எண்ணிக்கை வெகு குறைவு தான்.
மகாராஷ்டிர மாநிலம், பல்கார் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத் சேவ் என்ற இளைஞரும் ஆட்டோமொபைல் பொறியியல் படித்து முடித்த நிலையில், பாரம்பரியமாக வீட்டில் செய்து வருகின்ற விவசாய தொழிலையே கையில் எடுக்க முடிவு செய்தார். அதுவும் எப்படி? பல்கார் மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்வது தான் பரவலாக எல்லோரும் செய்கின்ற விவசாயம்.
ஆர்கிட் பூக்கள் சாகுபடி
ஆனால், தனக்கென்று புது பாணியை கடைப்பிடிக்காமல் எதையும் சாதிக்க முடியாது என்று நினைத்தார் பிரசாத். இதனால் ஆர்கிட் மலர்கள் சாகுபடி செய்வது என்று முடிவு செய்தார். இவருக்கு சொந்தமாக மூன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. தங்கள் ஊரில் யார் ஒருவரும் ஆர்கிட் மலர் சாகுபடி செய்திடாத நிலையில் இது சற்று சவாலான காரியம் என்பதை பிரசாத் உணர்ந்தார்.
Read More : கொளுத்தும் கோடை வெயில்....ஃபலூடா விற்பனை மூலம் தினசரி ரூ.5,000 அள்ளும் வியாபாரி..!
முறையான திட்டமிடல்
ஆர்கிட் மலர் சாகுபடியில் என்னென்ன சவால்கள் காத்திருக்கும் என்பதை அறிந்து கொள்ள கோவா, டெல்லி, கொல்கத்தா போன்ற இடங்களுக்கு பயணம் செய்து, அங்குள்ள ஆர்கிட் மலர் பண்ணைகளை பார்வையிட்டார். இறுதியாக தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து ஆர்கிட் செடிகளை இறக்குமதி செய்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதன் முதலில் சுமார் 40 ஆயிரம் செடிகளை பிரசாத் சாகுபடி செய்தார். இதைத்தொடர்ந்து தற்போது அவரது மூன்றரை ஏக்கர் நிலங்களில் மொத்தம் ஒன்றரை லட்சம் ஆர்கிட் மலர் செடிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஆர்கிட் மலர்களை பாதுகாக்க வலைகளால் ஆன பந்தல்களையும் அமைத்துள்ளார்.
செடிகள் விற்பனை
பிரசாத்தின் தோட்டங்களில் இருந்து ஆர்கிட் மலர் குச்சிகள் சாகுபடி பணிக்காக விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு குச்சியும் தலா ரூ.20 முதல் ரூ.25 வரையில் விற்பனையாகிறது. மாதந்தோறும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் குச்சிகள் வரையில் விவசாயிகளிடம் விற்பனை செய்யப்படும் நிலையில், அதன் மூலமாக லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைப்பதாக தெரிவிக்கிறார் பிரசாத்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Maharashtra, Trending Video