முகப்பு /செய்தி /இந்தியா / விவாகரத்துக்கு வந்த தம்பதியை பேசியே சேர்த்து வைத்த நீதிபதி..! மாலை மாற்றி ஒன்று சேர்ந்த ஜோடி!

விவாகரத்துக்கு வந்த தம்பதியை பேசியே சேர்த்து வைத்த நீதிபதி..! மாலை மாற்றி ஒன்று சேர்ந்த ஜோடி!

மீண்டும் இணைந்த தம்பதி

மீண்டும் இணைந்த தம்பதி

நீதிபதி நீதிமன்றத்திற்கு வந்தவுடன் முதலில் இருவரிடமும் தங்கள் தவறுகளை புரிய வைக்க முற்பட்டார்.

  • Last Updated :
  • Madhya Pradesh, India

மாலையில் இருக்கும் மலரையும் நூலையும் போல கணவன்-மனைவி இணைந்திருக்க வேண்டும் என திருமணத்தின் போது பலர் வாழ்த்துவார்கள். ஆனால் பலர் சின்ன சின்ன விஷயங்களுக்காக சண்டையிட்டு நிரந்தரமாக பிரிவதையும் பார்க்கிறோம். அப்படி சின்ன விஷயத்தால் தொடங்கிய விரிசல் விவாகரத்து வரை சென்றால், இரு தரப்பு குடும்பங்களையும் இணைப்பது கடினம். அந்த வகையில், சமீபத்தில் விவாகரத்து இறுதி விசாரணையில் முடிவெடுப்பதற்கு முன், குடும்ப நீதிமன்ற நீதிபதி தம்பதிகளுக்கு வாழ்க்கையைப் புரிய வைத்திருக்கிறார். இதனால் தற்போது அந்த ஜோடி மீண்டும் இணைந்திருக்கிறது.

இனி இது போன்ற தவறான புரிதல்களை உருவாக்க மாட்டோம் என்று சபதம் செய்துவிட்டு அவர்கள் நீதிமன்றத்தை விட்டு தங்கள் வீட்டிற்கு கிளம்பினர். கணவன்-மனைவி இடையே நடக்கும் சிறு சிறு விஷயங்கள் குறித்து நீதிபதி கூறியது, தங்களுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியதால், இனிமேல் தங்களுக்குள் தவறான புரிதல்கள் ஏற்படாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தின் குடும்ப நீதிமன்றத்திற்கு வந்தது. அங்குள்ள கோபால்கஞ்சில் வசிக்கும் சோனு ஷர்மாவிற்கும் அவரது மனைவி வர்ஷா சர்மாவிற்கும் இடையே கொரோனா நேரத்தில் சின்ன சின்ன விஷயங்களால் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக வர்ஷா தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் இருவரும் கோபமடைந்து கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், 1 ஆண்டுக்கு முன்பு குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தனர். இவர்களது விவாகரத்து மனு குடும்பநல நீதிமன்ற தலைமை நீதிபதி அதுல் கண்டேல்வால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி நீதிமன்றத்திற்கு வந்தவுடன் முதலில் இருவரிடமும் தங்கள் தவறுகளை புரிய வைக்க முற்பட்டார். அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாததால், இருவரின் தந்தையும் அங்கு வரும்படி உத்தரவிட்டார் நீதிபதி.

கணவர் சோனு கோபால்கஞ்சில் வசித்து வந்தார். மனைவி வர்ஷா தனது தந்தையுடன் நீதிமன்றத்திற்கு வந்தபோது, ​​நீதிபதி அவரை அவரது மாமியார் வீட்டிற்கு அனுப்பினார். மெதுவாக விஷயம் நல்லிணக்கத்தை நோக்கி முன்னேறியது. பின்னர் சோனு - வர்ஷா இருவரும் ஒருவருக்கொருவர் மாலை அணிவித்து மீண்டும் இணைந்தனர். இனி ஒருவரையொருவர் நம்பி நல்லிணக்கத்தை பேணுவோம் என்றும் கூறினர். இதன் மூலம் ஒரு குடும்பத்தை பிரிவில் இருந்து காப்பாற்றியுள்ளார் குடும்பநல நீதிமன்ற தலைமை நீதிபதி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published:

    Tags: Divorce, Tamil News