நமது பிரபஞ்சம் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கும் முன் உருவானது. இந்த பரந்த மற்றும் எல்லையற்ற விண்வெளியில் சுமார் 4 சதவிகிதத்தை மட்டுமே நாம் கண்டுபிடித்துள்ளோம். வானில் பல்வேறு இயற்கையான நிகழ்வுகள் நடைபெறுகிறது. அவற்றில் ஒன்று தான், சூரியன் மற்றும் சந்திர கிரகணம்.
இது வானியல் ரீதியாகவும், ஜோதிடம் ரீதியாகவும் பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஜோதிடத்தில், கிரகணம் ஒரு அசுப நிகழ்வாக பார்க்கப்படுகிறது. எனவே தான், கிரகண நேரத்தில் சுப காரியங்கள் செய்ய கூடாது என கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.
நீங்கள் எப்போதாவது, கிரகணங்கள் ஏன்?.... எப்படி ஏற்படுகின்றது என யோசித்தது உண்டா?. சூரிய கிரகணத்திற்கும் சந்திர கிரகணத்திற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
சூரிய கிரகணம் என்பது என்ன?
சூரிய கிரகணம் என்பது சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நேரடியாக வரும்போது ஏற்படும் ஒரு நிகழ்வு ஆகும். அது சூரிய ஒளியை பூமியில் விழாமல் தடுக்கிறது. இதனால், கிரகண நேரத்தில் இருள் காணப்படுகிறது.
NASA-வின் விளக்கப்படி, சூரியனின் ஒளியை சந்திரன் முழுமையாக மறைத்தாள் அது முழு சூரிய கிரகணம் என்றும், சூரிய ஒளியின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் நிலவு மறைத்தால் அது பகுதி சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.
சந்திர கிரகணம் என்பது என்ன?
சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஊருக்கும் போது, சூரியனின் ஒளி சந்திரன் மீது விழாமல் பூமி தடுப்பதைத் தான் சந்திர கிரகணம் என்கிறோம்.
Also Read | Lunar Eclipse 2023 : இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்… இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்!
முழு சந்திர கிரகணம் நிகழும்போது, முழு சந்திரனும் பூமியின் நிழலில் மூழ்கும். பூமி பாதி நிலவை மட்டும் மறைக்கும் போது சிவப்பு நிறமாக மாறும். இதை "இரத்த நிலா" கிரகணம் என்று குறிப்பிடப்படுகின்றன.
சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் என்ன என்பதை தெளிவாக பார்த்தோம். அவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சூரிய கிரகணத்திற்கும் சந்திர கிரகணத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
சூரிய கிரகணம் | சந்திர கிரகணம் |
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வருகிறது. | சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருகிறது. |
இது ஒவ்வொரு 1.5 ஆண்டுகள் அல்லது 18 மாதங்களுக்கு ஒருமுறை நிகழ்கிறது. | இது வருடத்திற்கு இரண்டு முறை நிகழ்கிறது. |
குறுகிய காலத்தைக் கொண்டது. பொதுவாக சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். | நீண்ட காலம் நிகழும். குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் நீடிக்கும். |
இது அமாவாசை நாளில் நடைபெறும். | இது பௌர்ணமி நாளில் நடக்கும். |
சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது பாதுகாப்பானது அல்ல. ஏனென்றால், தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்கள் உங்கள் விழித்திரையை சேதப்படுத்தும். ஆனால், சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்.
2023 ஆம் ஆண்டின் முதல் பெனும்பிரல் சந்திர கிரகணம் மே 5 ஆம் தேதி நிகழும். இந்த கிரகணம் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் பகுதிகளில் இருந்து தெரியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Astrology, Lunar eclipse