முகப்பு /செய்தி /இந்தியா / மணிப்பூரில் பெட்ரோல் தட்டுப்பாடு.. நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள்..

மணிப்பூரில் பெட்ரோல் தட்டுப்பாடு.. நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள்..

நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள்

நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள்

வன்முறைக்கு உள்ளான மணிப்பூரில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் பெட்ரோல் நிலையங்கள் முன்பு காத்துக் கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது.

  • Last Updated :
  • Manipur, India

மெயிட்டி சமூகத்தினரை பட்டியல் பழங்குடி பிரிவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூரில் நடைபெற்ற ஒற்றுமைப் பேரணியில் கலவரம் வெடித்தது. மாநிலம் முழுவதும் கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டது. காவல்துறையினரால் வன்முறையை கட்டுப்படுத்த முடியாததால், ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படைப்பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது அமைதி திரும்பியுள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது. இதற்கிடையே, மணிப்பூரில் பெட்ரோல் நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதேபோல், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுதாக தகவல் வெளியாகி உள்ளது.

வன்முறை சம்பவத்தையடுத்து மணிப்பூரில் தங்கியுள்ள வெளி மாநிலத்தவர்கள், அங்கிருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு இம்பாலில் இருந்து கொல்கத்தாவிற்கு 2 சிறப்பு கூடுதல் விமானங்களை இண்டிகோ விமான நிறுவனம் இயக்கியது.

First published:

Tags: Manipur, Petrol, Violence