ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த இரு வாரமாக முடங்கியுள்ளன. இந்நிலையில், மக்களவை இன்று காலை மீண்டும் கூடியது.
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக ராகுல் காந்தியின் எம்.பி பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கேள்வியெழுந்த நிலையில், இன்று ராகுல் காந்தி மக்களவை நடவடிக்கையில் கலந்து கொண்டார். அவை கூடியதும் காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளை விட்டு வெளியேறி சபாநாயகர் இருக்கை அருகே சென்று அமளியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். அவைகூடியபின் எதிர்கட்சிளின் தொடர் அமளிக்கு மத்தியில் நிதி மசோதா நிறைவேறியது. மசோதா நிறைவேறிய பின் மக்களவை வரும் 27ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து மாநிலங்களவையிலும் அமளி நீடித்ததால், அவை பிற்பகல் 2.30 வரை ஒத்திவைக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Delhi, Lok sabha, PM Narendra Modi, Rahul Gandhi