முகப்பு /செய்தி /இந்தியா / யார் இந்த சித்தராமையா..? மாஸ் தலைவரின் முழு வரலாறு..

யார் இந்த சித்தராமையா..? மாஸ் தலைவரின் முழு வரலாறு..

யார் இந்த சித்தராமையா..? மாஸ் தலைவரின் முழு வரலாறு..

கர்நாடகா முதலமைச்சராக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள சித்தராமையாவின் வரலாறு.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியும் முதலமைச்சர் நாற்காலியில் யாரை அமர வைப்பது என்ற குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில் காங்கிரஸ் தலைமையின் நம்பிக்கையை பெற்று முதலமைச்சர் அரியணையில் அமர்கிறார் சித்தராமையா. கர்நாடக முதலமைச்சராக இரண்டாவது முறையாக சித்தராமையா  பதவியேற்க உள்ளார்.

சித்தராமையாவின் அரசியல் வரலாற்றையும் அவர் முன் இருக்கும் சவால்களையும் DECODE நிகழ்ச்சியில் அலசியிருக்கிறார் ஆசிரியர் கார்த்திகை செல்வன். மொழிக்கொள்கை, கன்னட மக்களுக்கான மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்தாவர் என மாஸ் லீடராக அறியப்படுகிறார்.

சித்தராமையா, படிப்படியாக கஷ்டப்பட்டு படித்து மைசூரில் இளநிலை அறிவியல் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், சட்டக் கல்லூரியில் படித்த காலக் கட்டத்தில் சோசலிச கருத்துகளில் ஈர்க்கப்பட்ட சித்தராமையா, மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறார்.

' isDesktop="true" id="983556" youtubeid="Ta1PKHhfWqI" category="national">

கர்நாடகத்தில் 13-முறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார். இந்தியாவில் உள்ள பல தலைவர்களுடன் சித்தராமையாவுக்கு இணக்கமான நட்பு இருந்தது. இந்த அனுபவங்களே தற்போது காங்கிரஸ் தலைமை அவருக்கு முதலமைச்சர் நாற்காலி வழங்கி காரணமாக அமைந்துள்ளது.

First published:

Tags: Congress, Decode, Karnataka, Karnataka Election 2023, Siddharamaiah