முகப்பு /செய்தி /இந்தியா / தரமற்ற மருந்துகள் உற்பத்தி.. 18 நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு

தரமற்ற மருந்துகள் உற்பத்தி.. 18 நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இந்தியாவில் 20 மாநிலங்களில் உள்ள 76 மருந்து நிறுவனங்களில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சோதனை நடத்தியது.

  • Last Updated :
  • Delhi, India

இந்தியாவில் தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த 18 மருந்து நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் உஸ்பெகிஸ்தான் மற்றும் காம்பியா நாடுகளில் 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன், இந்திய நிறுவனம் தயாரித்த மருந்தை பயன்படுத்தியதால் அமெரிக்காவில் 55 பேரின் கண்பார்வை பறிபோனதுடன் ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உலக சுகாதார மையம் இந்திய அரசிடம் அறிவுறுத்தியது. இதன்பேரில், டெல்லி, பிகார், ஆந்திரா உட்பட 20 மாநிலங்களில் உள்ள 76 மருந்து நிறுவனங்களில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சோதனை நடத்தியது.

top videos

    மத்திய, மாநில அரசுகளின் சுகாதார குழுக்கள் ஒன்றிணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன. இதில் தரமற்ற வகையில் மருந்துகள் தயாரித்தது உறுதி செய்யப்பட்டதால் 18 மருந்து நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், 26 மருந்து நிறுவனங்களிடம் உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    First published:

    Tags: Medical shop, Medicines, Tamil News