முகப்பு /செய்தி /இந்தியா / “நான் தமிழ் கலாச்சாரத்தைப் போற்றுபவன்...” - தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு..!

“நான் தமிழ் கலாச்சாரத்தைப் போற்றுபவன்...” - தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு..!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்,  தமிழ் புத்தாண்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

  • Last Updated :
  • Delhi, India

தமிழ்க் கலாச்சாரத்தைப் போற்றுவோர்களில் ஒருவராக தமிழ் புத்தாண்டு விழாவில் கலந்துகொள்கிறேன் என பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் புத்தாண்டு விழா உலகமெங்கும் உள்ள தமிழர்களால் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்,  தமிழ் புத்தாண்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளார். அதில் குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொள்கிறார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்னும் சற்று நேரத்தில், இரவு சுமார் 8.15 மணியளவில், எனது அமைச்சரவை சகாவான எல்.முருகன் இல்லத்தில் நடைபெறவுள்ள தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நான் பங்கேற்கவிருக்கிறேன். தமிழ்க் கலாச்சாரத்தைப் போற்றுவோர்களில் ஒருவராக நான் இந்த விழாவை பேராவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: PM Modi, Tamil New Year