பொதுவாக மக்கள் தங்கள் மனதில் உள்ள அனைத்து வகையான சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வதற்காக தான் பெரும்பாலும் கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபாடு செல்கிறார்கள். மேலும், தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற தங்கள் நம்பிக்கைக்குரிய இறை வழிபாட்டை மேற்கொள்கிறார்கள்.
அதே போன்று, ஒவ்வொரு மதத்தினரும் ஒரு குறிப்பிட்ட கடவுளை வணங்கி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், குஜராத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும் சேர்ந்து வழிபாடு செய்ய கூடிய ஒரு இறை வழிபாட்டு தலம் உள்ளது. இங்கு குறிப்பாக குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்வோர் அதிகப்படியாக செல்கின்றனர். குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள மொகல் தாம் (Mogal Dham) என்பது நம்பிக்கைக்குரிய இறை வழிபாட்டு தலங்களில் ஒன்றாகும். நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான மக்கள் தங்கள் குழந்தைப் பேறுக்காக இந்த தளத்திற்கு வருகிறார்கள்.
இந்த இடத்திற்குச் சென்றால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது மக்களின் நீண்ட நாள் நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும், இந்த தளத்திற்கு சென்று வழிபடும் மக்களிடம் இருந்து ஒரு ரூபாய் கூட இங்கு பெறப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தலத்திற்கு இந்துக்கள் மட்டுமின்றி, இஸ்லாமிய தம்பதிகளும் இங்கு வருவதால், இந்த இடம் நம்பிக்கையின் ஒருங்கிணைப்பாக உள்ளது.
மேலும் படிக்க : திருமணத்திற்கு முன்பே உடலுறவில் ஈடுபட அனுமதி.. வினோத வழக்கம் கொண்ட பழங்குடியின சமூகம்..!
கட்ச்சின் பச்சாவ் தாலுகாவில் உள்ள கப்ராவ் கிராமத்தில் உள்ள மா மொகலின் கோவில் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையின் சின்னமாக உள்ளது. இந்த கோவிலின் மீதுள்ள நம்பிக்கையே தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து வணங்குவதற்கு சான்றாகும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கோயிலுக்கு வெளியே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர். பக்தர்களின் வசதிக்காக, இங்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு மற்றும் நாள் முழுவதும் இலவச தேநீர் வழங்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக இவை குறிப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : ஒரு லிட்டர் டீசலில் ரயில் எத்தனை கிலோ மீட்டர் ஓடும்னு தெரியுமா...? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!
காணிக்கை செலுத்தினால் பாவம்
லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்தாலும், கோயிலில் காணிக்கை பெட்டி வைக்கப்படவில்லை. இதனுடன், கோவிலுக்கு காணிக்கை செலுத்தும் பக்தர்களால் பாவங்கள் குவிந்து வருவதாகவும் இங்கு போர்டு வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வேண்டி பக்தர்கள் இங்கு வரும் அதே வேளையில், கோயிலில் பிரார்த்தனை செய்து குழந்தைகளைப் பெற்ற தம்பதிகளின் வருகையும் அதிகமாக உள்ளது. திருமணமாகி 18 மற்றும் 20 வருடங்கள் கழித்து குழந்தை பாக்கியம் பெற்ற தம்பதிகளை இந்த கோவிலில் நாம் காண முடியும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள்
இந்த கோவிலில் உள்ள இதுபோன்ற அதிசய விஷயங்களை அறிந்துக்கொண்டு லண்டன், ஆப்ரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் இங்கு வந்து குழந்தை பாக்கியம் பெறுகின்றனர். மேலும், குழந்தை ஆசை நிறைவேறியதையடுத்து, தம்பதிகள் தங்களுக்குப் பிறந்த குழந்தையுடன் கோயிலுக்கு வந்து ஆயிரம் முதல் லட்சம் ரூபாய் வரை காணிக்கை செலுத்துகின்றனர். ஆனால், கோயில் நிர்வாகத்தினர் அதை ஏற்பதில்லை. இந்த தொகையை கோவில் நிர்வாகத்தினர் அந்த தம்பதியருக்கே திருப்பித் தந்து விடுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gujarat