கோடைக்காலத்தில் மட்டுமில்லை மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் கூட தெருக்களில் விற்பனை செய்துவரக்கூடிய குல்ஃபி மீது ஒவ்வொருவருக்கும் அலாதிப்பிரியம். ஆம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பால், சர்க்கரை, பாதாம், பிஸ்தா கலந்த குல்ஃபியை ருசித்து சாப்பிடுவார்கள். இப்படி மக்களுக்கு விருப்பமான குல்ஃபியை மட்டும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள டோஹாலியா தஸ்பரா என்ற கிராமம் மக்கள்.
குல்ஃபி தயாரிப்பில் அசத்தும் கிராமம்…
டோஹாலியா தஸ்பரா கிராமத்தில் உள்ள சுமார் 25 குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் குல்ஃபி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இருந்து மதியம் வரை சுமார் 120-130 சுவையான குல்ஃபி ஐஸ்கிரீம்களை தயாரிக்கின்றனர். கொஞ்சம் கூட ஓய்வில்லாமல் தயாரிக்கும் குல்ஃபிகள் மதியத்திலிருந்து விற்பனைக்குத் தயாராக உள்ளது.
தற்போது கோடைக்காலம் என்பதால், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளுகுளு குல்ஃபிகளை வாங்கி சாப்பிடுவதால் விற்பனை அமோகமாக உள்ளது. இவ்வாறு இந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் முழுவதும் இதே தொழிலில் ஈடுபடுவதால் தான் குல்ஃபி கிராமம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. அருகில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இந்த குல்ஃபி பேமஸானதோடு படுஜோராக விற்பனையாகிவருகிறது.
Read More : மண்ணிலே ஈரமுண்டு.. இலவசமாக வாதாடும் வழக்கறிஞர்.. நிஜத்தில் மீண்டும் ஒரு ஜெய்பீம் கதை!
இதுக்குறித்து குல்ஃபி கிராமத்தைச் சேர்ந்த அனுபவமிக்க குல்ஃபி விற்பனையாளர் சுரேன் தாஸ் கூறுகையில், அதிகாலையிலிருந்து மதியம் வரை நாங்கள் தயாரிக்கும் குல்ஃபி ஐஸ்கிரீம்களை அருகில் உள்ள ஊர்களுக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்கிறோம். தினமும் ரூ. 700 ரூபாய்க்கு மேல் ஒவ்வொருவரும் சம்பாதிக்கிறோம். இதனால் தான் எங்கள் கிராமத்தை குல்ஃபி கிராமம் என்று அழைப்பதாக பெருமையுடன் கூறுகிறார். இதோடு தரமான பால் மற்றும் அதற்கு தேவையானப் பொருள்களை வாங்குகிறோம். இதற்கு சுமார் ரூ.700 வரை செலவாகிறது. இந்த பொருள்களை வைத்து தினமும் சுமார் 120 குல்ஃபிகளைத் தயார் செய்கிறோம் என்கிறார்.
மேலும் தற்போது கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியில், குல்பியின் வருகைக்காக மக்கள் ஆவலுடன் காத்திருப்பது எங்களை சோர்வடைய செய்யவில்லை என பெருமிதம் கொள்கிறார். குறிப்பாக இந்த கிராமத்தில் உள்ள பெண்களும் குல்ஃபி தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். வீட்டுப்பொறுப்புகளை நிர்வகிப்பதோடு, இதுப்போன்று கணவருடன் சேர்ந்து தொழில் செய்வதால் எங்களின் பொருளாதார நிலை மேம்படுகிறது என்கிறார் இக்கிராமத்தைச் சேர்ந்த சுகன்யா தாஸ்.இது போன்று குடும்பத்தினர் அனைவரையும் சேர்ந்து குல்ஃபி செய்வதால் தான் இக்கிராமம் அனைவரிடத்திலும் குல்ஃபி கிராமம் என்ற பெருமையுடன் வலம் வருகிறது.
இத்தகைய ருசியான குல்ஃபியை எப்படி செய்வது என்று நாமும் இங்கே தெரிந்துக் கொள்வோம்.சுவையான குல்ஃபி ஐஸ்கிரீமை தயாரிப்பதற்கு, முதலில் ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் பாலை நன்றாக கொதிக்க விட வேண்டும். இதனுடன் ஏலக்காய் தூள் சேர்க்கப்படுகிறது. பால் முழுவதும் கெட்டியான பதம் வரும் வரை மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பின்னர் சர்க்கரை, பாதாம் மற்றும் பிஸ்தா போன்றவற்றை கலந்து, குல்ஃபி அச்சுகளில் ஊற்றப்படுகிறது. இதன் பின்னர் பிரிட்ஜரில் வைத்து குளிர்ச்சியூட்டினால் போதும் சுவையான குல்ஃபி ரெடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bay of Bengal