முகப்பு /செய்தி /இந்தியா / குழந்தைகள் ஸ்பெஷல்.. சாக்லேட் பானிபூரி விற்பனையில் அசத்தும் பெண்..

குழந்தைகள் ஸ்பெஷல்.. சாக்லேட் பானிபூரி விற்பனையில் அசத்தும் பெண்..

அஷ்வினி உமேஷ் சாவந்த்..!

அஷ்வினி உமேஷ் சாவந்த்..!

அஷ்வினி உமேஷ் சாவந்த் என்பவர் கோலாப்பூரில் உள்ள ரங்கலா ஏரி பகுதியில் உள்ள Kharade கல்லூரி அருகே பானிபூரி கடை வைத்துள்ளார். இவரது கணவர் வங்கியில் பணிபுரிகிறார். இவருடைய தந்தை மற்றும் சகோதரன் இருவரும் சமையல் வேலை செய்கிறார்கள்.

  • Last Updated :
  • Kolhapur, India

பானிபூரி என்றாலே பலரின் நாவில் எச்சில் ஊறும். சாதாரண பானி பூரிக்கே மக்கள் நேரம் காலம் பார்க்காமல் கூட்டம் கூடுவார்கள். அதுவே சற்றே வித்தியாசமான அதே சமயம் சுவையான பானிபூரி டிஷ் என்றால், கூட்டத்திற்கு கேட்கவா வேண்டும்.!சாக்லேட் பானிபூரி விற்கப்படுவதால், கோலாப்பூரில் உள்ள பானிபூரி ஸ்டால் ஒன்று குழந்தைகளால் அலைக்கழிக்கப்படுகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோலாப்பூரில் (kolhapur) உள்ள ஒரு பானிபூரி ஸ்டாலில் சாக்லேட் பானிபூரி விற்கப்படுகிறது. இதனால் அந்த ஸ்டால் அடிக்கடி குழந்தைகள் கூட்டத்தில் நிரம்பி விடுகிறது.

அஷ்வினி உமேஷ் சாவந்த் என்பவர் கோலாப்பூரில் உள்ள ரங்கலா ஏரி பகுதியில் உள்ள Kharade கல்லூரி அருகே பானிபூரி கடை வைத்துள்ளார். இவரது கணவர் வங்கியில் பணிபுரிகிறார். இவருடைய தந்தை மற்றும் சகோதரன் இருவரும் சமையல் வேலை செய்கிறார்கள். இவர்களால் தான் புதிய சுவையான உணவுகளை சமைக்க மற்றும் சர்வ் செய்யும் ஆர்வத்தை வளர்த்து கொண்டுள்ளார் அஷ்வினி. இவர் ஏற்கனவே சுவையான பானிபூரி, டபேலி, ஸ்பிரிங் பொட்டேடோஸ் போன்ற பல ஸ்னாக்ஸ்களை தயாரித்து மக்களிடையே விற்று பெரும் வெற்றி கண்டுள்ளார்.

பிரபலமான ஸ்னாக்ஸ்களை சுவையாக தந்ததால் மக்கள் இவரது தயாரிப்புகளை விரும்பினர் மற்றும் சிலர் இவரது சுவையை கேள்விப்பட்டு கடையை தேடி கண்டுபிடித்து வாங்கி சுவைத்தும் சென்றனர். வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்ததால் ரங்கலா ஏரிக்கு அருகே சத்ரபதி ஸ்நாக்ஸ் (Chhatrapati Snacks) என்ற பெயரில் ஸ்டால் அமைத்து, தனது பானிபூரி விற்பனையை தொடங்கினார். 2 மாதங்களுக்கு முன் இந்த ஸ்டாலை துவங்கிய அஷ்வினியின் கடாயில் விற்கப்பட்டு வரும் ஸ்னாக்ஸ்களை வாடிக்கையாளர்கள் வழக்கம் போல மிகவும் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். தினசரி 150 முதல் 200 பிளேட்ஸ் பானிபூரி உட்பட பிற ஸ்னாக்ஸ்களையும் விற்கிறார். இதற்கிடையே குழந்தைகளை கவர்வதற்காக பிரத்யேகமாக சாக்லேட் பானிபூரியையும் அறிமுகப்படுத்தினார்.

Read More : இளைஞரின் ஆணுறுப்பை கடித்து குதறிய நாய்... ஊர் மக்கள் கூடி எடுத்த அந்த முடிவு...!

மேலும் தனது வாடிக்கையாளர்களுக்கு வாரத்திற்கு 2 முறை அன்லிமிட்டட் பானிபூரியையும் வழங்குகிறார். அஷ்வினியின் ஸ்டாலில் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில், அன்லிமிட்டட் பானிபூரி ரூ.49-க்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் போது மக்கள் 50 முதல் 100 பானிபூரிகளை சாப்பிடுகிறார்கள். ஒரு கண்காட்சியில் Dabeli என்ற ஸ்னாக்ஸை விற்று கொண்டிருந்த போது வழக்கமாக விற்கும் பானிபூரியை கூட வித்தியாசமாக விற்கலாமே என்று நினைத்தேன். தவிர குழந்தைகள் பொதுவாக ஸ்வீட் பானிபூரியை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே தான் சாக்லேட் பானிபூரி யோசனையை செயல்படுத்த முடிவு செய்தேன் என்கிறார் அஷ்வினி.

சாக்லேட் பானிபூரி : பொதுவாக பானிபூரி பச்சை புதினா தண்ணீர் மற்றும் புளி கலந்த சிவப்பு நீருடன் பரிமாறப்படுகிறது. மேலும் இந்த பூரி பிசைந்த உருளைக்கிழங்கு, பதப்படுத்தப்பட்ட பூந்தி, ஊறவைத்த சன்னா மற்றும் சேவ் உள்ளிட்டவற்றால் பானிபூரி நிரப்பப்படுகிறது. ஆனால் அஷ்வினி இவற்றுக்கு பதிலாக சாக்லேட் பானிபூரியில் பொருட்களை மாற்றினார். இவரது ஸ்பெஷல் ஸ்னாக்ஸான சாக்லேட் பானிபூரியில் மேற்கண்ட பொருட்களுக்கு பதிலாக முந்திரி கலந்த மில்க் ஷேக், பாதாம், உலர் பழங்கள், ரெயின்போ ஸ்பிரிங்க்ஸ் மற்றும் லிக்விட் சாக்லேட்ஸ் பயன்படுத்தப்படுகிறது.

top videos

    விலை விவரங்கள் : அஷ்வினியின் ஸ்டாலில் ப்ளைன் பானிபூரி ரூ.20-க்கும், சேவ்பூரி ரூ.30-க்கும், தாஹிபூரி ரூ.40-க்கும், சாக்லேட் பானிபூரி ரூ.40-க்கும், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அன்லிமிட்டட் பானிபூரி ரூ.49-க்கும் கிடைக்கிறது.இவரது கடை முகவரி,Kharade காலேஜ் கேட் அருகில், ரங்கலா லேக் ஏரியா, சி வார்டு, சிவாஜி பெத், கோலாப்பூர் - 416012

    First published:

    Tags: Maharashtra, Trending, Viral