மசான் மண்டை ஓடு பற்றியும், அங்குள்ள மக்களின் நம்பிக்கைப்படி அந்த ஊரை மசான் மண்டை ஓடு எவ்வாறு பாதுகாத்து வருகிறது என்பது பற்றிய இரகசியத்தையும் உள்ளூர் வாசியான ஷிவ் மோகன் கார்க் கூறியுள்ளார். இது தீய சக்தி மற்றும் தீய ஆன்மாக்களை நெருங்க விடாமல் தடுப்பதன் மூலம் அனைவரிடத்திலும் உள்ள பயம் மற்றும் கெட்ட எண்ணத்தை போக்குவதாக கூறுகிறார்.
அனைவரது ஆர்வத்தையும் தூண்டும் , சித்ராகூட்டில் கார்வி டெஷிசில் பகுதியில் கட்டப்பட்டுள்ள ஒரு பழைய கல்லறையைச் சுற்றி பல மர்மங்களும், கதைகளும் நிலவி வருகிறது. இந்த கல்லறைக்குள் காணப்படும் சமாதிகள் மற்றும் மசூதி இத்கா என்று அழைக்கப்படுகிறது. இந்த கல்லறையின் மேற்கூரையில் ஒரு மண்டை ஓடு ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. இந்த மண்டை ஓட்டின் மேஜிக்கே அங்குள்ள மக்களை பாதுகாத்து வருவதாக ஒரு நம்பிக்கை.
இந்த கல்லறையை பல தலைமுறைகளாக ஷா குடும்பம் பராமரித்து வருகிறது. இந்த கல்லறையைப் பற்றி கதைகள் சொல்லப்படுவதால் பலரது கவனத்தை ஈர்க்கும் இதனை பல்வேறு இடங்களைச் சேர்ந்த மக்கள் பார்வையிடுகின்றனர். தலைகீழாக தொங்கும் அந்த மண்டை ஓடே கல்லறையை பாதுகாத்து வருவதாக அங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.
Read More : பொம்மைகளுக்குள் ஒளிந்திருக்கும் முகங்கள்.. அனுபவங்களை பகிரும் பொம்மை மனிதர்கள்!
இந்த மண்டை ஓட்டில் உள்ள ஏதோ ஒரு சக்தி தான் இதுநாள் வரை அங்குள்ள மக்களை காப்பாற்றி வருவதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். கெட்ட ஆவிகளை விரட்டி அடித்து மண்டை ஓடு தான் ஊர் மக்களை பாதுகாப்பதாக உள்ளூர் வாசி ஷிவ் மோகன் கார்க் கூறுகிறார்.
இதன் காரணமாகவே அந்த கல்லறையை பராமரிக்க ஷா குடும்பம் நியமிக்கப்பட்டது. இந்த மண்டை ஓடு ஒரு சில இரவுகளில் ஜொலிக்க ஆரம்பிக்கும் என்றும், பொழுது விடியும் போது அது அதன் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்றும் சொல்லப்படுகிறது. இது கருப்பு இரவாக கருதப்படுகிறது. ஆச்சரியமூட்டும் விதமாக, இந்த கருப்பு இரவின் போது மண்டை ஓட்டின் நிறமானது மாறுகிறது. அதே நேரத்தில் அங்குள்ள வானிலையிலும் மாற்றம் ஏற்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending, Uttar pradesh