"ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் மிகப்பெரும் அளவில் மழை பொழிவு இருக்கும்" என எதிர்கால முன்னறிவிப்புகளை கொடுக்கும் குழு என்று கூறப்படும் மகாராஷ்டிராவை சேர்ந்த பெண்ட்வால் காட் மண்டானி குழுவானது, தனது கணிப்பில் கூறியுள்ளது.
மிகவும் புகழ்பெற்ற எதிர்காலத்தை கணிக்கும் இந்த குழுவானது நமது நாட்டின் அரசாங்கம், பொருளாதாரம், விவசாயிகளின் நிலை மற்றும் பல இதர பிரச்சனைகளை ஒவ்வொரு வருடமும் அக்ஷய திருதியை அன்று கணித்து வெளியிடுவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். இந்துக்கள் புனிதமாக கருதும் அன்றைய நாளில் இந்த எதிர்கால கணிப்புகளை வெளியிடுவதில் அவர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர். அதன்படி இந்த வருடம் அக்ஷய திருதியையொட்டி கணிப்பை அக்குழு வெளியிட்டுள்ளது.
பெண்ட்வால் காட் மண்டானி கணிப்புகள்:
ஒவ்வொரு வருடமும் மகாராஷ்டிரா மாநிலத்தின் புல்தானா மாவட்டத்தில் அமைந்துள்ள ஜல்காவுன் ஜமொத் தாலுகாவில் இந்த முன்னறிவிப்பானது பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சந்திரபான் மகாராஜ் பொஞ்சாதி மகாராஜ் மற்றும் சாரம்தார் மகாராஜாவின் வாரிசுகள் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் சூரிய உதயத்தின்போது தங்களது கணிப்புகளை வெளியிட்டனர்.
அப்போது இந்த வருடம் எதிர்காலத்தை கணித்த குழுவினரின் கூற்றுப்படி அரசருக்கு நிகராக கருதப்படும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கோ அல்லது அவரின் பதவிக்கோ எந்தவித ஆபத்தும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
Also see... இந்திய ஹாக்கி அணிக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்கும் ஒப்பந்தம் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு..!
வேளாண் சார்ந்த கணிப்புகள்:
ஜூன் மாதத்தில் எதிர்பார்த்ததை விட மழையின் அளவு சற்று குறைவாகவே இருக்கும் என்றும், ஜூலை மாதத்தில் தேவையான அளவு மழை பொழியும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் மிகப்பெரும் அளவில் மழை பொழிவு இருக்கும் என கணிப்பில் கூறப்பட்டது.
இவற்றை தவிர பருத்தி மற்றும் திணை பயிர்களின் உற்பத்தி வழக்கம் போல இருக்கும் என்றும், துவரை சாகுபடி அமோகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. பாசிப்பருப்பு மற்றும் உளுந்து சாகுபடி எப்போதும் போல சாதாரணமாக இருக்கும் என்றும், எள் மற்றும் பஜிரா பயிர்கள் உற்பத்தியானது சாதாரணமாக இருந்தாலும், அதிகப்படியான மழை பொழிவால் விளைச்சல் பாதிக்கப்படும் என கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
Also see... Video | கழிவறையில் பிரியாணி அரிசியை கழுவிய ஊழியர்கள்... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...!
பெண்ட்வால் கணிப்பு என அழைக்கப்படும் இந்த பாரம்பரிய முறையானது கடந்த 370 வருடங்களாக நடைமுறையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன் வாழ்ந்த துறவி சந்திரபான் மகாராஜ் என்பவரின் வழிகாட்டிலின்படி கிராமத்தில் எதிர்காலத்தை கணிக்கும் இந்த பாரம்பரியமானது பின்பற்றப்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றங்களை பற்றி எந்தவித கணிப்பையும் மேற்கொள்ள முடியாத அந்த காலகட்ட சூழலில் தன்னுடைய 'நில்வந்தி' சக்தியை பயன்படுத்தி இவர் எதிர்காலத்தை கணித்து வெளியிட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி வருடா வருடம் கிராமத்தில் விளைச்சல், அரசியல், பொருளாதாரம் மற்றும் சமுதாய நிலைகள் ஆகியவற்றை பற்றிய கணிப்புகளை மிகச் சரியாக கூறி வந்துள்ளதாகவும் இன்றளவும் கூட அங்குள்ள விவசாயிகள் இந்த கணிப்புகளை மிகவும் சார்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Astrology, Local News, Modi, Pm, Rasi Palan