முகப்பு /செய்தி /இந்தியா / 15 நிமிடம் தாமதமாக எழுப்பிய தந்தை... ஆத்திரத்தில் அடித்து கொன்ற மகன்... கேரளாவில் பகீர் சம்பவம்

15 நிமிடம் தாமதமாக எழுப்பிய தந்தை... ஆத்திரத்தில் அடித்து கொன்ற மகன்... கேரளாவில் பகீர் சம்பவம்

தந்தையை கொலை செய்த மகன் கைது

தந்தையை கொலை செய்த மகன் கைது

தூங்கிக்கொண்டிருந்த தன்னை உரிய நேரத்தில் எழுப்பவில்லை என்ற ஆத்திரத்தில் மகன் தந்தையை அடித்து கொன்ற அதிர்ச்சி சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

  • Last Updated :
  • Kerala, India

கேரளாவில் சாதாரண விஷயத்திற்காக ஏற்பட்ட சண்டை ஒன்று கொலையில் முடிந்துள்ளது. அம்மாநிலத்தின் திருச்சூரில் உள்ள கோடனூர் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான ஜாய். இவருக்கு ரீனா என்ற மனைவியும், அலீனா என்ற மகளும் உள்ளனர். 25 வயதில் ரிஜோ என்ற மகனும் உள்ளார்.

இளைஞர் ரிஜோ வெல்டிங் கடையில் வேலை செய்பவர். சம்பவ நாளான கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதியம் குடித்துவிட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார் ரிஜோ. தன்னை இரவு 8.15 மணிக்கு எழுப்ப வேண்டும் என தந்தையிடம் கூறிவிட்டு படுத்து உறங்கியுள்ளார். ஆனால் தந்தை ஜோய் சிறிது தாமதாமாக இரவு 8.30 மணிக்கு மகனை எழுப்பிவிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மகன் ரிஜோ ஏன் என்னை தாமதமாக எழுப்பினீர்கள் என தந்தையுடன் வாக்குவாதம் செய்து பிரச்சனை செய்ய ஆரம்பித்துள்ளார். இது ஒருகட்டத்தில் கோர சண்டையாக மாறியதில் தந்தையை அடித்து கொலை செய்துள்ளார் ரிஜோ.

இதையும் படிங்க: சாக்லேட் வாங்கித் தராத கணவர்... உயிரை மாய்த்துக் கொண்ட காதல் மனைவி- பெங்களூருவில் சோகம்

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறை ரிஜோவை கைது செய்துள்ளது. ஜாய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளது. தாமதமாக எழுப்பியதற்கு தந்தையை மகன் அடித்து கொலை செய்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Kerala, Murder