முகப்பு /செய்தி /இந்தியா / ‘ஜோடி ஷேரிங்’ மனைவிகளை மாற்றி உல்லாசம்.. அம்பலப்படுத்திய கேரள பெண் படுகொலை

‘ஜோடி ஷேரிங்’ மனைவிகளை மாற்றி உல்லாசம்.. அம்பலப்படுத்திய கேரள பெண் படுகொலை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தனது மனைவிகளை வேறு நபர்களுடன் மாற்றி உறவு கொள்ளும் சம்பவங்கள் குறித்து போலீசாரிடம் புகார் அளித்த அளித்த கேரளா பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

  • Last Updated :
  • Kerala, India

தனது மனைவிகளை வேறு நபர்களுடன் மாற்றி உறவு கொள்ளும் சம்பவங்கள் குறித்து போலீசாரிடம் புகார் அளித்த  கேரளா பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் ஷினோ மேத்யூ. வயதான இவருக்கு பாலகாட்டைச் சேர்ந்த பெண்ணுடன் 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் உள்ளன. இந்நிலையில், ஷினோவின் மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவர் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அதன்படி, பெண்ணின் கணவருக்கு சில பணக்கார நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் இணைந்து ஜோடி ஷேரிங், கப்பிள் மீட் அப் போன்ற சில குழுக்களை சமூக வலைத்தளங்களில் உருவாக்கி, தங்கள் மனைவிகளை பரஸ்பரம் பகிரந்து செக்ஸ் உறவு கொள்ளும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ஒரு நாளில் பெண்ணின் கணவர், தனது மனைவியிடம் வந்து தனக்கு தெரிந்த நபர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அவ்வாறு செய்யவில்லை என்றால் குழந்தைகளை கொன்றுவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், தனக்கு நடந்த அவலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

அதன் பேரில், காவல்துறை பெண்ணின் கணவரை பிடித்து விசாரித்து அவரின் செல்போன்களை வாங்கி சோதித்து பார்த்தது. அதில் இதுபோன்ற செயல்களில் நூற்றுக்கணக்கனா நபர்கள் ஈடுபட்டது அம்பலமானது. மேலும், கணவர் மேத்யூவுடன் குழுவில் இருந்த 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை பேசி விவாகரத்தான பெண்ணிடம் ரூ.20 லட்சம் சுருட்டிய நபர்

இந்த சம்பவத்திற்கு பிறகு பாதிக்கப்பட்ட பெண் கணவனை பிரிந்து தந்தை மற்றும் சகோதரர் துணையுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், தனது கணவர் மீது புகார் கொடுத்த அந்த பெண் கடந்த மே 19ஆம் தேதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அன்றைய தினம் பெண்ணின் தந்தையும், சகோதரரும் வேலைக்கு சென்ற நிலையில், அந்த நேரத்தில் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

top videos

    தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தையும், சகோதரரும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். பெண்ணின் கணவர் தான் பழிவைத்து இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பேரில் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Crime News, Kerala Couple