முகப்பு /செய்தி /இந்தியா / இளம் மருத்துவர் கத்திரிக்கோலால் குத்திக் கொலை... மருத்துவமனைகளை மூடுங்கள் என நீதிமன்றம் காட்டம்..!

இளம் மருத்துவர் கத்திரிக்கோலால் குத்திக் கொலை... மருத்துவமனைகளை மூடுங்கள் என நீதிமன்றம் காட்டம்..!

கேரளா உயர் நீதிமன்றம்

கேரளா உயர் நீதிமன்றம்

கேரளாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

  • Last Updated :
  • Kerala, India

கேரளாவில் சிகிச்சை அளித்த பெண் மருத்துவரை, கைதி ஒருவர் கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவத்தில், மருத்துவர்களைப் பாதுகாக்க முடியவில்லை என்றால் மருத்துவமனைகளை மூடுங்கள் என்று நீதிமன்றம் கட்டமாக கண்டித்துள்ளனர். 

கேரளாவில், வீடு புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தீப் என்பவர், சிகிச்சைக்காக கொட்டாரகரையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக பணியிலிருந்த மருத்துவர் வந்தனாவை, சந்தீப் கத்தரிக்கோலால் குத்தி கொடூரமாகத் தாக்கினார்.

இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் காவலர்கள் அவரை பிடித்துக் கட்டி வைத்தனர். இதில், காவலர்கள் 5 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மருத்துவர் வந்தனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த தாக்குதலைக் கண்டித்தும், உரியப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இதனிடையே மருத்துவர் கொலை தொடர்பாக, மாநில காவல்துறை தலைவர் ஆன்லைன் வாயிலாக ஆஜராகி விளக்கம் அளிக்க கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Also Read : ஓட்டு போட முகத்தை ஸ்கேன் செய்யனும்... முதல் முறையாக கர்நாடக தேர்தலில் அறிமுகம்..!

மருத்துவர் கொலை வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்றம், மாநில அரசு மற்றும் காவல்துறையைக் கடுமையாகக் கண்டித்தது. மருத்துவர்களைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், மருத்துவமனையை மூடிவிடுங்கள் என்றும் காட்டமாக நீதிபதிகள் கண்டித்தனர். இந்நிலையில், மருத்துவர் உயிரிழப்பு தொடர்பாக மாநில காவல்துறைத் தலைவர் நாளை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

First published:

Tags: Doctor, Kerala, Woman