முகப்பு /செய்தி /இந்தியா / செல்போனில் ஆபாச சாட்டிங்... முதியவருக்கு ஆசை வலை... வசமாய் சிக்கிய இளம்பெண்..!

செல்போனில் ஆபாச சாட்டிங்... முதியவருக்கு ஆசை வலை... வசமாய் சிக்கிய இளம்பெண்..!

கேரளா கிரைம் செய்தி

கேரளா கிரைம் செய்தி

திருவனந்தபுரம் அருகே போலி சமூக வலைத்தளக் கணக்கு மூலம் பல ஆண்களை ஏமாற்றிய பணம் பறித்த இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • Last Updated :
  • Kerala, India

திருவனந்தபுரம் அருகே அஸ்வதி என்ற இளம்பெண் ”அஸ்வதி அச்சு, அனுஸ்ரீ அனு” போன்ற பெயர்களைப் பயன்படுத்தி போலிக் கணக்குகளை மூலம் போலீசார் உட்படப் பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். இவர் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 68 வயது முதியவரிடம் திருமணம் செய்துகொள்ளுவதாகப் பணம் பறித்த புகாரில் முதல் முறையாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலிக் கணக்கைப் பயன்படுத்தி, பூவார் பகுதியைச் சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும், தனக்கு 40,000 ரூபாய் கடன் உள்ளதாகவும் அதனை அடைத்தால் தான் திருமணம் செய்துகொள்ள முடியும் என்று முதியவரிடம் கூறியுள்ளார். அந்த வார்த்தைகளை நம்பி அவரும் பணத்தை வழங்கியுள்ளார்.

பணத்தை வாங்கிக்கொண்டு இளம்பெண் தலைமறைவாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து, முதியவர் போலீசில் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் உதவியுடன் இளம்பெண் இருக்கும் இடம் கண்டறியப்பட்டது. அவர் வாடகைக்குக் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து திருவனந்தபுரம் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே இந்த இளம்பெண் மீது திருவனந்தபுரம் பாங்கோடு காவல் நிலையத்தில் கொல்லம் பகுதி எஸ்ஐ புகார் அளித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. அதில், இதே பெண் முகநூல் மூலம் பழகி நட்பாகப் பேசி சுமார் 1 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், போலீசார் உட்பட பல பிரபலங்களையும் இந்த பெண் ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்துள்ளது. இதற்காக சமூக வலைதளத்தில் இருந்து கிடைக்கும் பல இளம் பெண்களில் புகைப்படங்கள் கொண்டு போலி கணக்குகளை உருவாக்கியுள்ளார். இது தொடர்பாகவும், தனது புகைப்படத்தைப் பயன்படுத்தியதாகக் கொல்லத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மோசடி புகாரை இவர் மீது அளித்துள்ளார்.

Also Read : ”ஒரு படத்தால் ஒன்றும் ஆகிவிடாது..” - தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை விதிக்க மறுத்த கேரள உயர்நீதிமன்றம்..!

போலிக் கணக்குகள் மூலம் பல ஆண்களைத் தனது வலையில் சிக்க வைத்து அவர்களுடன் நட்பாகப் பேசுவது போல் தொடங்கி, ஆபாசமாக சாட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, அந்த சாட்டிங்களை வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இது வரையும் பணம் பறிகொடுத்தவர்கள் புகார் அளிக்காததால் சிக்காமலிருந்த பெண்ணை தற்போதே போலீசார் கைது செய்துள்ளனர்.

First published:

Tags: Crime News, Kerala