முகப்பு /செய்தி /இந்தியா / கேரளாவில் ஓடும் ரயிலில் தீ வைத்த சம்பவம்.. குற்றவாளியின் உருவப்படம் வெளியீடு!

கேரளாவில் ஓடும் ரயிலில் தீ வைத்த சம்பவம்.. குற்றவாளியின் உருவப்படம் வெளியீடு!

குற்றவாளி உருவப்படம் வெளியீடு

குற்றவாளி உருவப்படம் வெளியீடு

Kerala fire accident | ஓடும் ரயிலில் தீ வைத்து தப்பி சென்ற குற்றவாளியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Last Updated :
  • Keral, India

கேரளாவில் ஓடி கொண்டிருந்த ரயிலில் பெண் உட்பட பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளியின் உருவப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆலப்புழா - கண்ணூர் விரைவு ரயிலில் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு சென்றுக்கொண்டிருந்தது. இரவு 9.37 மணிக்கு D1 கோச்சில் பயணம் செய்த பெண் உட்பட பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மர்மநபர் ஒருவர் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இரண்டு பாட்டில் பெட்ரோல் உடன் ரயிலின் உள்ளே புகுந்த மர்ம நபர் D1 கோச்சில் பயணம் செய்த பெண் உட்பட பயணிகளின் மீது திடீரென பெட்ரோல் ஊற்றிய பின் தீ பற்ற வைத்துள்ளார். இதனை பார்த்த ரயிலில் பயணிகள் அபாய சங்கிலி இழுத்து ரயிலை நிறுத்திய நேரத்தில் ரயிலில் இருந்து அந்த நபர் வெளியே குதித்து தப்பி ஓடி உள்ளதாக பயணிகள் கூறி உள்ளனர்.

தீ படர்ந்து பற்றி எரிவதை பார்த்த சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த செய்தனர். தொடர்ந்து ரயில்வே போலீசார் மற்றும் எலத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பொது மக்கள் தீ காயம் அடைந்த பயணிகளை 8 பேரை மீட்டு கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தலை மறைவான மர்ம நபரை பிடிக்க போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Also Read:  ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைப்பு.. 3 பேர் பலி - கேரளாவில் பயங்கரம்

சம்பவ இடத்திற்கு கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர், ADGP கோழிக்கோடு மேயர் உட்பட அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். தனிப்பட்ட முறையில் பெண் மீது தாக்குதல் நடத்தி கொலை முயற்சியா இல்லை ரயிலில் விபத்து ஏற்படுத்த சதி திட்டமா என பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயில் தண்டவாளத்தில் இருந்து 3 சடலங்கள் மீட்பு. ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையின் உடல்கள் மீட்பு. தீயில் இருந்து தப்பிக்க ரயிலில் இருந்து வெளியேற முயன்ற போது கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

top videos

    தப்பி ஓடிய மர்ம நபர் பிடிபட்டால் மட்டுமே இந்த தாக்குதல் சம்பவத்தின் நோக்கம் என்னவென்று தெரியவரும். இரவு நேரத்தில் விரைவு ரயிலில் பெட்ரோல் உடன் மர்ம நபர் புகுந்து தீ விபத்து ஏற்படுத்தி தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டு தப்பி சென்ற சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்புயும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தப்பியோடிய குற்றவாளியின் உருவப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

    First published:

    Tags: Crime News, Fire accident, Kerala, Train