ஆலப்புழா - கண்ணூர் விரைவு ரயிலில் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. இரவு 9.37 மணிக்கு D1 கோச்சில் பயணம் செய்த பெண் உட்பட பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி மர்மநபர் ஒருவர் தீ பற்ற வைத்துள்ளார். இதனை பார்த்த ரயில் பயணிகள், அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய நேரத்தில், ரயிலில் இருந்து அந்த நபர் வெளியே குதித்து தப்பி ஓடியதாக பயணிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து ரயில்வே போலீசார் மற்றும் எலத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள், தீக்காயம் அடைந்த பயணிகள் 8 பேரை மீட்டு கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தலைமறைவான மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையே, நள்ளிரவில் ரயில் தண்டவாளத்தில் இருந்து ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை ஆகியோரின் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. தீயில் இருந்து தப்பிக்க ரயிலில் இருந்து வெளியேற முயன்ற போது கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்த மூவரும் கண்ணூர் மட்டன்னூர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
இந்நிலையில் இதுகுறித்த விசாரணையில் முஹம்மது ஷஹரூக் சைபி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். குற்றவாளியின் நோக்கம் மற்றும் தீவிரவாத தொடர்பு குறித்தும் ATS, NIA, ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு கேரளா காவல்துறை தனிப்படை போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்படுவார். இந்நிலையில் குற்றவாளி கைது செய்யப்பட்டதை உறுதி செய்து மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஊடகங்கள் மூலம் அறிவிப்பு வெளியிட்டார்.
குற்றவாளியின் குடும்பத்தினரிடம் ATS அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிரவாத தொடர்பு என்பதை உறுதி செய்தனர். ரயிலில் தாக்குதல் நடத்தியதின் நோக்கம் மற்றும் எந்த அமைப்பு பின்னணியில் போன்ற விஷயங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arrest, Fire accident, Kerala, Train