முகப்பு /செய்தி /இந்தியா / சோதனை ஓட்டம் வெற்றி.. பயணத்தை தொடங்கவுள்ள கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில்!

சோதனை ஓட்டம் வெற்றி.. பயணத்தை தொடங்கவுள்ள கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில்!

மாதிரிப்படம்..

மாதிரிப்படம்..

திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரையிலான சோதனை ஓட்டம் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் அடுத்த வாரத்திலிருந்து செயல்படும்.

  • Last Updated :
  • Kerala, India

கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் அடுத்த வாரத்திலிருந்து செயல்பட உள்ளது. பயண நேரம் மற்றும் நிறுத்தங்கள் குறித்த விவரங்களை ரயில்வே அமைச்சகம் இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை. தற்போது, ​​இந்த இரண்டு நிலையங்களுக்கு இடையே செயல்படும் ரயில்களில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் தான் அதிவேகமானது. நீங்கள் ஒன்பது மணிநேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றுவிடலாம்.  திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரையிலான சோதனை ஓட்டம் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் அடுத்த வாரத்திலிருந்து செயல்படும். இது தெற்கு ரயில்வேயின் மூன்றாவது வந்தே பாரத் ரயிலாகும். இதனுடன் சேர்த்து, நாட்டில் உள்ள அரை-அதிவேக ரயில்களின் எண்ணிக்கை 15 ஆக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயண நேரம் மற்றும் நிறுத்தங்கள் குறித்த விவரங்களை ரயில்வே அமைச்சகம் இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை. தற்போது, ​​இந்த இரண்டு நிலையங்களுக்கு இடையே செய்லபடும் ரயில்களில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் தான் அதிவேகமானது. நீங்கள் ஒன்பது மணிநேரத்தில் இலக்கை அடைந்து விடலாம்.“புதன்கிழமை அன்று திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு இடையேயான சோதனை ஓட்டம் நடைபெற்றது. அது வெற்றியடைந்தது, ”என்று தெற்கு ரயில்வேயின் அதிகாரி ஒருவர் நியூஸ் 18 இடம் கூறினார்.

வந்தே பாரத் சென்னையில் இருந்து கிளம்பி சனிக்கிழமை அன்று கேரளா சென்றடைந்தது. திங்களன்று, அதன் முதல் சோதனை ஓட்டம் திருவனந்தபுரம் மற்றும் கண்ணூர் இடையே நடந்தது. ஏழு மணி 10 நிமிடங்களில் ரயில் அந்தப் பயணம் முடிந்தது. செவ்வாயன்று, காசர்கோடு வரை ரயிலை நீட்டிக்க அமைச்சகம் முடிவு செய்தது. ஆகையால், புதன்கிழமை அன்று, திருவனந்தபுரத்தில் இருந்து இந்த நிலையத்திற்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

Read More : “இந்தியா உலகிற்கு யுத்தத்தை தரவில்லை.. புத்தரை தந்துள்ளது” - பிரதமர் மோடி பெருமிதம்..!

தெற்கு ரயில்வேயின் முதல் இரண்டு வந்தே பாரத் விரைவு ரயில்கள் சென்னையில் இருந்து இயக்கப்பட்டன. மேலும், கடந்த இரண்டு வாரங்களில் அறிவிக்கப்பட்டதால், இதுவே இரண்டாவது தெற்கு ரயில்வே வந்தே பாரத் ரயிலாகும். புதிய நிதியாண்டில் வந்தே பாரத் ரயில்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த மாதம் தொடங்கப்படும் ஐந்தாவது வந்தே பாரத் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதியன்று, ராணி கமலாபதி மற்றும் டெல்லி இடையே வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டது.

அதை அடுத்து ஏப்ரல் 8 ஆம் தேதியன்று, செகந்திராபாத்-திருப்பதி மற்றும் சென்னை-கோவை ஆகிய இரண்டு ரயில் பெட்டிகள் தொடங்கப்பட்டன. பின்னர் கடந்த வாரம், அஜ்மீர்-டெல்லி கண்டோன்மென்ட் வந்தே பாரத் தொடங்கப்பட்டது. தற்போது, ​​டெல்லியில் இருந்து அஜ்மீர், வாரணாசி, கத்ராவில் உள்ள வைஷ்ணோ தேவி, போபால் மற்றும் ஆம்ப் ஆண்டௌரா வரை என ஐந்து வந்தே பாரத் ரயில்களும், மும்பையில் இருந்து காந்திநகர், ஷீரடி மற்றும் சோலாப்பூர் வரை என மூன்று வந்தே பாரத் ரயில்களும், சென்னையில் இருந்து மைசூர் மற்றும் கோயம்புத்தூர் வரை என இரண்டு வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்படுகின்றன.

பிலாஸ்பூர்-நாக்பூர், ஹவுரா-புதிய ஜல்பைகுரி, செகந்திராபாத்-திருப்பதி மற்றும் செகந்திராபாத்-விசாகப்பட்டினம் முதலிய வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.விநியோகம் மற்றும் உற்பத்தியை ஆயத்தப்படுத்திய போதிலும், அமைச்சகம் அதன் இலக்கில் பின்தங்கிய நிலையில் உள்ளது. கடந்த நிதியாண்டில், 35 வந்தே பாரத் ரயில்களை ரயில்வே திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 8 ரயில்களை மட்டுமே அவர்களால் இயக்க முடிந்தது.

First published:

Tags: Kerala, Vande Bharat